சாமியார் நித்தியானந்தா பற்றி கனடிய பெண் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ

சாமியார் நித்தியானந்தாவுக்கும் கனடிய பெண் சிஷ்யைக்குமான மோதல் உச்சத்தை தொட்டுள்ள நிலையில், நித்தியானந்தா தன்னிடம் காதலை வெளிப்படுத்தி முத்தமிட்டதாகக் கூறி, ஆதாரத்தை வீடியோவாக அப்பெண் வெளியிட்டுள்ளார்.

நித்தியானந்தாவை சுற்றி எப்போதும் எதாவது சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டு வருகின்றன.

கனடாவை சேர்ந்த சாரா லேண்ட்ரி என்ற இளம் பெண் இந்தியாவுக்கு வந்து சாமியார் நித்தியானந்தாவின் சிஷ்யையாக மாறி துறவறம் பெற்றார்.

பின்னர் சாமியாரால் மா நித்தியானந்த சுதேவி என பெயர் சூட்டப்பட்டார்.

பின்னர் நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து வெளியேறிய சாரா, அவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாடுகளை முன்வைத்தார்,

அதாவது ஆசிரமத்தில் உள்ள சிறுவர் சிறுமிகள் வலுக்கட்டாயமாக தூக்கத்தில் இருந்து எழுப்பப்படுவதாகவும், இயற்கை உபாதைகளை கழிக்க கூட அனுமதிப்பதில்லை எனவும் அடுக்கடுக்கான புகார்களை கூறினார்.

இதையெல்லாம் நித்தியானந்தா மறுத்தார்,

கனடா நாட்டு பெண்ணின் புகாருக்கு நித்தி, தனது பெண் சிஷ்யைகளை வைத்து சமூக வலைதளங்களில் பதில் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் பேஸ்புக்கில் சதாசிவம் என்ற பெயரில் தன்னுடன் நட்பில் இணைந்த நித்தியானந்தா, தன்னை காதலிப்பதாக கூறியதாகவும், தன்னை ஆசீர்வதிப்பதாக கூறி முத்த குறியீடுகளை பறக்கவிட்டதாகவும் சாரா புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் பேஸ்புக் மெசன்ஜரில் நித்தியானந்தாவும், சாராவும் பேசும் நீண்ட உரையாடல் இடம் பெற்றுள்ளது.

இருவருக்கும் இடையே மோதல் அதிகரித்து வரும் நிலையில் பொலிசார் இதில் தலையிட்டு விசாரணை நடத்தினால் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.