கிளிநொச்சி, அம்பாள்குளம் பகுதியில் விசேட அதிரடிப் படையால் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு!

கிளிநொச்சி, அம்பாள்குளம் பகுதியில் ஆயுதங்கள் உட்பட்ட பெருமளவான இராணுவ உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையில் நேற்று கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரின் வீட்டிலிருந்தே குறித்த ஆயுதங்கள் இன்றுமீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மீட்பு நடவடிக்கையை விசேட அதிரடிப் படையினரும், பொலிஸாரும் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது, ரி-56 ரக துப்பாக்கி-1, பிஸ்டல்கள் -3, கைக்குண்டுகள் -5, ரி-56 ரக துப்பாக்கி ரவைகள் 150, பிஸ்டல் ரவைகள் 45, மடிக்கணினி ஒன்று, தொலைபேசிகள் -4, எம்.ரி.எம்.ரி ரக துப்பாக்கி ரவைகள் 7, டேட்டனேற்றர்கள் 45, ஜி.பி.எஸ்-1, டிஜிட்டல் கமெரா, சிறிய ரிமோட் வகைகள், குண்டுகளை வெடிக்க வைக்கப் பயன்படுத்தப்படும் வயர்கள், வெடிப்புக் கருவிகள் உட்பட இன்னும் சில உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்த நிலையில் மீட்கபட்ட ஆயுதங்கள் தொடர்ஈள் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கபட்டுள்ளது.