ஆரஞ்சு சாலட் செய்வது எப்படி.?!

தேவையான பொருட்கள்:

தேன் – 2 டீஸ்பூன்,

ஆரஞ்சு பழம் – 1 ,

குங்குமப்பூ – சிறிதளவு,

செய்முறை :

ஆரஞ்சு பழத்தில் இருந்து கொட்டை மற்றும் தோலை நீக்கி சுத்தமாக்கி எடுத்து கொள்ளவும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் கொட்டை மற்றும் தோலை நீக்கி சுத்தம் செய்த ஆரஞ்சு பழங்களை போட வேண்டும்

இத்துடன் தேன் மற்றும் குங்குமப்பூ ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து பின்னர் சாப்பிடவும்.
சுவையான சத்தான ஆரஞ்சு சாலட் தயார்.

பயன்கள்:

ஆரஞ்சு உடலுக்கு குளிர்ச்சியை தரும். இத்துடன் தேன் மற்றும் குங்குமப்பூ கலப்பதால் உடல் மற்றும் முகம் பளபளப்புடன் காணப்படும்.

மேலுக்கும், இது மலச்சிக்கலை குணப்படுத்த வல்லது.

இதில் வைட்டமின் சி மற்றும் சிட்ரிக் அமிலம் இருப்பதால், செரிமானத்திற்கு வழி வகை செய்யக்கூடும்.

சூடு மற்றும் செரிமானம் இல்லாமை போன்றவற்றால் தோன்றும் வயிற்று வழியை குணப்படுத்தும்.