கொஞ்சம் சிரிங்க பாஸ்..!!

ராம் : டாக்டர் நான் 100 வயசு வரைக்கும் வாழனும்..
டாக்டர் : சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ!
ராம் : கல்யாணம் பண்ணா 100 வயசு வாழ முடியுமா டாக்டர்?
டாக்டர் : இல்ல.. 100 வயசு வாழனும்ங்கற ஆசை போயிடும்.
ராம் : 😋😋

தீபக் : பொதுவா ஆண்கள் இடதுகைல வாட்ச் கட்டுவாங்க. பெண்கள் வலதுகைல வாட்ச் கட்டுவாங்க ஏன் தெரியுமா?
குணா : தெரியாதே….
தீபக் : மணி பாக்கத்தான்!!!
குணா : 😠😠

பாபு : பஸ்-ல போகும்போது என் பையில் ஒருத்தன் பிளேடு போட்டுட்டான்.
அருண் : அப்புறம் என்னாச்சி?
பாபு : பிளேடை தூக்கி வெளியில் போட்டுட்டேன்.
அருண் : 😩😩!

காவலாளி : எதிரி நாட்டு மன்னன் அந்தப்புரத்திற்குள் நுழைந்துவிட்டதாக தகவல் வந்துள்ளது மன்னா!
மன்னர் : உடனே, மகாராணியாரின் மேக்கப்பை கலைத்துவிட சொல்லுங்கள். இத்தோடு தொலைந்தான் எதிரி…

காவலாளி : 😲😲

நபர் 1 : பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு எப்படி போகணுங்க?

நபர் 2 : இது என்னய்யா..!! பைத்தியக்காரத்தனமான கேள்வி. பைத்தியத்தோடத்தான் போகணும்…

நபர் 1 : 😩😩