வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை தற்பொழுது வழமைக்கு திரும்பியுள்ளது.

இந்த வருடத்தின் முதல் 9 மாத காலப்பகுதியில் சுமார் 14 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

அசாதாரண சூழ்நிலை காரணமாக வீழ்ச்சியடைந்திருந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை தற்பொழுது வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

கடந்த மாதத்தில் மாத்திரம் 1 இலட்சத்து 8575 சுற்றுலாப் பயணிகளின் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

கடந்த மாத காலப்பகுதியில் பெரும் எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.