சிறையிலிருந்து வெளியே வந்த தாயுடன் கவின் வெளியான புகைப்படம்

பிரபல ரிவி ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மனதில் அதிகமாக இடம்பிடித்த கவின் தற்போது தாய் மற்றும் பாட்டியுடன் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்தே பல பிரச்சினைகளை சந்தித்து வந்த கவின் அண்மையில் பிக்பாஸ் அறிவித்த 5 லட்சம் ரூபாய் பணத்துடன் வெளியேறினார்.

அதுவும் தனது நண்பர்களுக்காக என்பது ரசிகர்களுக்கு நன்றாகவே தெரிந்தது. இந்நிலையில் வெற்றி மேடையில் கவினுக்கு விளையாட்டை மாற்றியமைத்தவன் என்ற விருதினை கமல் கொடுத்தார்.

அப்பொழுது அவர் கூறுகையில், 5லட்சத்தினை எடுத்துட்டு வெளியே வந்திருக்காவிட்டால் கவின் தற்போது இந்த இறுதி மேடையில் நிச்சயமாக நின்றிருப்பார் என்று கூறினார்.

இந்நிலையில் தனது குடும்ப சூழ்நிலையினை வெளியில் வந்து அறிந்த கவின், சிறையில் இருந்த தாய் மற்றும் பாட்டியை ஜாமீனில் எடுத்தார். அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற காரணமே தனது குடும்பம் மற்றவர்களிடம் பட்ட கடனை அடிப்பதற்காகவே…

தற்போது தனது தாய் மற்றும் பாட்டியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றினை கவின் வெளியிட்டுள்ளார். இதனைத்தான் இத்தனை நாட்களாக ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.