சர்க்கரை நோயிற்கு என்ன தீர்வு..!!!

தினமும் கொய்யா பழத்தை சாப்பிடுவது மனிதன் நோய்நொடி இல்லாமல் வாழ உதவுகிறது. இந்த கொய்யாப் பழத்தில் மிக அதிமான மருத்துவப் பயன்கள் இருக்கின்றது. மிக எளிதாகவும், விலை மலிவாகவும் கிடைப்பதால் கொய்யாப் பழத்தைப் பற்றிய நன்மைகளை பலரும் அறியமாலே விட்டுவிடுகின்றனர்.

கொய்யாப் பழத்தை சாப்பிடுவதன் காரணமாக சர்க்கரையின் அளவு திடீரென உயர்வது தடுக்கப்படுகின்றது. மேலும் மிக அதிக அளவில் நார்ச்சத்தினை உள்ளடக்கி இருப்பதால், சர்க்கரையின் அளவு சீராக இருக்கும். எனவே நீரிழிவு நோயினால் பதிக்கப்பட்டு இருப்பார்களுக்கு இது மிகவும் நல்லது.

தற்போது, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு கொய்யாப் பழம் ஒரு சிறந்த தீர்வாகவும். சர்க்கரை நோய் கொண்டிருப்பவர்கள் நன்கு பழுத்த பிறகு சாப்பிடுவதை தவிர்த்துவிட்டு சற்று காயாக இருக்கும் போதே சாப்பிடுவது நல்லது.

கொய்யா மரத்தில் இருக்கும் நுனி இலைகளை வேகவைத்து அந்த நீரை குடித்து வந்தால் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும். கொய்யா பழத்தில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால் செரிமான ஆரோக்கியத்திற்கு மிகுந்த பலனைத் தருகின்றது.

கொய்யாப் பழத்தின் விதைகளை முழுமையாகவோ அல்லது மென்று நொறுக்கிய பின் உண்டால் மலச்சிக்கல் பிரச்சனை முற்றிலும் நீங்கிவிடும். மேலும் மன அழுத்தத்தினையும் குறைத்து உங்கள் உடல் மற்றும் மனதிற்கு நல்ல ஆற்றலை கொடுக்கும்.