கிரிக்கெட் போட்டியின் போது அம்பயர்க்கு நடந்த துயரமான சம்பவம்!

பாகிஸ்தான் கராச்சியில் உள்ள டி.எம்.சி மைதானத்தில் நேற்று உள்ளூர் கிரிக்கெட் அணிகளுக்கிடையே கிளப் கிரிக்கெட் போட்டி நடைப்பெற்றது.

இந்தப் போட்டியில் 52 வயதான நஷீம் ஷேக் என்பவர் நடுவராக இருந்தார்.

போட்டி நடைபெற்று கொண்டிருக்கும் போதே நடுவர் நஷீம் திடிரென மைதானத்திலேயே சுருண்டு கீழே விழுந்தார். இதையடுத்து அவருக்கு உடனடியாக முதலுதவி கொடுக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நடுவர் நஷீமை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மாரடைப்பு காரணமாக இறந்து விட்டதாக தெரிவித்தனர். கிரிக்கெட் போட்டி நடைபெற்று கொண்டிருக்கும் போதே நடுவர் உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.