காரில் பெண்ணுடன் தனியாக இருந்த நாய் செய்த காரியம்.!

அமெரிக்காவில் பிரண்ட் பாரக்ஸ்(79) என்ற நபரும் மற்றும் டீனா என்ற அவரது பெண் உதவியாளரும் காரில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

அப்பொழுது, காரின் பின் சீட்டில் டீனாவும், பிரண்ட் வளர்க்கும் மோலி என்ற நாயும் அமர்ந்தவாறு பயணம் செய்துள்ளனர். அப்பொழுது, ட்ரெயின் க்ராஸ் ஒன்றில் இவர்களது கார் நிறுத்தப்பட்டது.

வண்டி நின்றவுடன், உள்ளே இருந்த மோலி அங்கும், இங்கும் தாவி உள்ளது. பின்னர், குறைத்து குதித்துள்ளது. இதன் காரணமாக காரில் வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி வெடித்துள்ளது.

இதன் காரணமாக டீனாவின் தொடையில் குண்டு பட்டு ரத்தம் கொட்டி உள்ளது. வலி தாங்காமல் டீனா அலறித்துடித்துள்ளார். இதனால், பதறிப்போன பிரண்ட் இது குறித்து காவல் துறைக்கு தகவல் கொடுத்தார். அங்கு வந்த காவல்துறையினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர் அங்கு நடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதில் சம்பவம் நடந்தது குறித்து விளக்கி விட்டு பின்னர் துப்பாக்கி வெடிக்கும் நிலையில் இனி வைக்க மாட்டேன் என பிரண்ட் உறுதி அளித்துள்ளார்.