உங்க பிறந்த திகதி படி உங்க காதல் வாழ்க்கை யாரோட நல்லா இருக்கும்னு தெரிஞ்சிக்கணுமா…?

உங்களின் வாழ்க்கைப் பாதை எண் என்பது உங்களின் ராசி போலவே உங்களின் எதிர்காலத்தை கணிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. உங்கள் வாழ்க்கைப் பாதை எண்ணை கணக்கிட உங்களின் மொத்த பிறந்த தேதியையும் ஒற்றை இலக்கம் வரும் வரை கூட்டவும். கடைசியாக வரும் ஒற்றை இலக்கம்தான் உங்களின் வாழ்க்கைப்பாதை எண் ஆகும். எடுத்துக்காட்டு: 23-11-1992, 2+3+1+1+1+9+9+2=25, 2+5=7

இந்த வாழ்க்கைப் பாதை எண் உங்கள் உங்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் முக்கியமானதாகும். குறிப்பாக இது உங்களின் திருமணம் மற்றும் காதல் வாழ்க்கையை நிர்ணயிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. உங்களின் வாழ்க்கைப்பாதை எண் உங்கள் காதல் வாழ்க்கையை பற்றி என்ன கூறுகிறது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

எண் 1

வாழ்க்கை பாதை எண் 1 உள்ளவர்கள் மிகவும் உள்ளுணர்வு உடையவர்கள் மற்றும் 3, 5 மற்றும் போன்ற ஒற்றைப்படை எண்களை கொண்டவர்களுடன் நன்றாக பழகுவார்கள். உங்களின் துணையின் இன்னும் 1 ஆகா இருந்தால் உங்களுக்குள் அதிக பிரச்சினைகள் எழ வாய்ப்புள்ளது. அதேசமயம் 3 மற்றும் 5 எண் உங்கள் உறவில் அதிக சுவாரஸ்யத்தை சேர்ப்பார்கள். இவர்கள் உங்களுக்குள் இருக்கும் சிறந்த குணங்களை வெளிக்கொண்டு வருவார்கள்.

எண் 2

இவர்கள் கூச்சசுபாவமும், ஆழமான சிந்தனையும் கொண்டவர்களாக இருப்பார்கள், இவர்கள் அனைத்து விஷயங்களையும் கட்டுப்படுத்தும் ஒருவருடன் இருக்க விரும்புவார்கள். உங்களை விட அதிக வணிக எண்ணம் கொண்டவர்களுடன் இருப்பது உங்களுக்கு நல்லது. உங்களுக்கான சிறந்த துணையாக 9 மற்றும் 4 இருப்பார்கள். இவர்களுக்கென சில குறைகள் இருந்தாலும் உங்களுடன் இருக்கும்போது இருவரும் சமநிலையில் இருப்பீர்கள். எண் 5-ஐ வாழ்க்கைப் பாதை எண்ணாக கொண்டவர்களிடம் இருந்து நீங்கள் விலகி இருக்க வேண்டியது அவசியம்.

எண் 3

அதிக சுறுசுறுப்பும், திறமையும் வாய்க்கப்பெற்றவர் நீங்கள், உங்கள் ஆற்றல் தொற்றுநோயாக மற்றவர்களுக்கும் பரவக்கூடியதாகும். அனைவருடனும் நீங்கள் ஒத்துப்போனாலும் 5 மற்றும் 2 உடன் உங்கள் வாழ்க்கையை பகிர்ந்து கொள்வது உங்களுக்கு அதிக பலனை அளிக்கும். உங்களின் ஆற்றலை சமநிலையில் வைத்திருக்க 7 சிறந்த துணையாக இருப்பார்கள். 8 ஆம் எண்ணில் பிறந்தவர்கள் உங்களை ஈர்த்தாலும் அவர்களிடம் இருந்து விலகி இருப்பதே உங்களுக்கு நல்லது.

எண் 4

இந்த எண்ணில் பிறந்தவர்கள் நம்பிக்கைக்கு உரியவர்களாகவும், இதயத்தில் இரக்கத்தையும் கொண்டவர்களாக இருப்பார்கள். உங்களின் வாழ்க்கைப்பாதை எண் 4 ஆக இருந்தால் உங்களுக்கு அதிக நண்பர்கள் இருப்பார்கள், அனைவரும் உங்களுடன் இருக்க விரும்புவார்கள். உங்களுக்கு 8 மற்றும் 1 ல் பிறந்தவர்கள் சிறந்த துணையாக இருப்பார்கள். நீங்கள் 9 ஆம் எண்ணிடமிருந்து விலகி இருக்க வேண்டும். இவர்கள் உங்களை புறக்கணிக்க அதிக வாய்ப்புள்ளது.

எண் 5

வாழ்க்கைப்பாதை எண் 5 ஆக இருப்பவர்கள் வேடிக்கையானவர்கள், அன்பானவர்கள் மற்றும் அர்பணிப்பு மிக்கவர்கள். இவர்களுக்கான ஒற்றைத் துணையை தேர்ந்தெடுப்பது மிகவும் கடினமான ஒன்றாகும். பொதுவாக ஒரே வாழ்க்கைப்பாதை எண் உடையவர்கள் சிறந்த தம்பதியாக இருக்க முடியாது, ஆனால் 5 மற்றும் இதற்கு விதிவிலக்காகும். இரண்டு 5 ஆம் எண்ணைக் கொண்டவர்கள் சிறந்த துணையாகவும் ஒருவருக்கொருவர் ஆதரவாகவும் இருப்பார்கள்.

எண் 6

வாழ்க்கை பாதை எண் 6 உள்ளவர்கள் அனைவருடனும் பழகுவதோடு, நடைமுறையில் அனைத்து வாழ்க்கை பாதை எண்களும் உங்களுடன் தங்கள் வாழ்க்கையை செலவிட விரும்புவதாகக் கூறப்படுகிறது. உங்களுக்கான சிறந்த துணை 2 ஆகும், உங்களைப் போன்றவர்களைத்தான் அவர்கள் விரும்புவார்கள். இவர்களைத் தொடர்ந்து 1 மற்றும் 8 சிறந்த துணையாக இருப்பார்கள்.

எண் 7

இந்த வாழ்க்கை பாதை எண்ணைக் கொண்டவர்கள் மிகவும் உறுதியுடன் இருப்பார்கள். நீங்கள் இந்த எண்ணில் உள்ள ஒருவரை காதலிக்கிறீர்கள் என்றால், அவர்கள் உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுடன் ஒட்டிக்கொள்வார்கள் என்று நீங்கள் உறுதியாக நம்பலாம். 7 என்ற எண் மிகவும் தத்துவமானது, மேலும் அவை 5 ஆம் எண்ணுடன் சிறப்பாக செயல்படுவார்கள். ஏனெனில் அவை 7 இன் தீவிரமான தன்மையில் கொஞ்சம் வேடிக்கையாக செலுத்த முடியும். 2 மற்றும் 8 ஆம் எண்ணை கொண்டவர்கள் உங்களை ஈர்த்தாலும் அவர்களிடம் இருந்து விலகி இருங்கள்

.எண் 8

ஒரு நபராக, நீங்கள் மிகவும் ஆதிக்கம் செலுத்துகிறீர்கள், எப்போதும்குழுவின் தலைவராக இருப்பீர்கள். உங்களுக்கு அதிக புத்திக்கூர்மையும், ஆதிக்கம் இல்லாத ஒருவர் தேவை, ஏனெனில் இது உங்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் சமநிலைப்படுத்துவதால் நீங்கள் 4 ஆம் எண்ணுடன் சிறப்பாகப் பொருந்துகிறீர்கள். ருப்பினும், நீங்கள் 2 மற்றும் 5 ஆம் இலக்கங்களுடன் நன்றாகப் பழகுவீர்கள், எண் 1 இலிருந்து விலகி இருங்கள்.

எண் 9

நீங்கள் கொஞ்சம் தனிமையில் இருக்கிறீர்கள், ஒருவருடன் இருப்பது உங்களுக்கு கடினமாக இருக்கலாம். நீங்கள் துணைக்காக ஏங்குபவர்களாக இருப்பீர்கள். இதனால் உங்களுக்கான துணையை தேர்ந்தெடுக்க உங்களுக்கு நீண்ட காலம் தேவைப்படும். 6 ஆம் எண்ணுடன் இருக்கும்போது நீங்கள் நல்லிணக்கத்தையும் அமைதியையும் அனுபவிப்பதால் அவர்கள் உங்களுக்கு சிறந்த துணையாக இருக்க வாய்ப்புள்ளது. அதேசமயம் அதிக உணர்ச்சிகள் கொண்ட 2 ஆம் எண்ணும் உங்களுக்கு சிறந்த துணையாக இருக்க வாய்ப்புள்ளது.