இந்த உணவுக்கெல்லாம் பெண்கள் நோ சொல்லவே கூடாது.!

பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய முக்கிய உணவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த உணவுகளை பெண்கள் தவிர்க்கவே கூடாது. பச்சை இலைக் காய்கறிகளில் பசலைக் கீரை, வெந்தயக் கீரை, ப்ராக்கோலி போன்ற உணவுப் பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த உணவுகளில் நார்ச்சத்து வைட்டமின் சி மற்றும் போலிக் ஆசிட் போன்றவை வளமாக இருக்கிறது. மேலும், கால்சியம், மக்னீசியம் இரும்புச்சத்து, பொட்டாசியம் இதில் அடங்கியுள்ளது. எனவே அன்றாட உணவில் பச்சை இலைக் காய்கறிகளை பெண்கள் தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

அடுத்ததாக நார்ச்சத்து மிகுந்த தானியம், இதில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகம் இருக்கின்றது. கோதுமை, கைகுத்தல் அரிசி போன்றவற்றை சாப்பிடுவது மிகவும் நல்லது. உடல் எடையை அதிகரிக்காமல் தடுக்கவும் உதவுகின்றது.

நட்ஸை ஸ்நாக்ஸாக சாப்பிடுவது மிக மிக நல்லது. ஏனெனில் அதில் புரோட்டீன், மக்னீசியம், வைட்டமின் பி மற்றும் ஈ ஆகியவை அடங்கி இருக்கின்றது. இது இதயநோய் மற்றும் புற்றுநோய் போன்றவை வராமல் தடுக்கின்றது. தினமும் பத்து பதினைந்து பாதாம் முந்திரி போன்றவை சாப்பிடுவது அவசியமாகும்.

தயிரில் வைட்டமின்கள், புரோட்டீன்கள், கால்சியம் ஆகியவை நிறைந்திருக்கின்றது. மேலும், ஆரோக்கியமான பாக்டீரியாக்கள் தயிரில் இருக்கின்றது. தினமும் தயிரை பெண்கள் தங்களுடைய உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இது எலும்புகளை வலுவாக்கி கால்சியம் குறைபாட்டை தவிர்க்கும்.

பழங்கள் பெர்ரிப் பழங்களான ஸ்ட்ராபெர்ரி கோடையில் அதிகம் கிடைக்கும். இந்த பழங்களில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் அதிகம் இருக்கின்றது. இது புற்று நோயை தடுத்து ஆரோக்கியத்திற்கு வழி வகை செய்யும்.