கோவக்கார கம்பீரையும், கோலியையும் வம்புக்கிழுத்த பாகிஸ்தான் வீரர்!

இந்தியா பாகிஸ்தான் அணிகள் இடையே நேரடி கிரிக்கெட் தொடர் கடந்த 2012ம் ஆண்டுக்குப் பிறகு நடைபெறவில்லை. கடந்த 2008 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இலங்கை வீரர்கள் தாக்கப்பட்ட பிறகு இந்திய அணி பாகிஸ்தான் செல்வதை தவிர்த்தது. அதேசமயம் பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு வந்து  விளையாடி வந்த நிலையில், கடந்த 2012ஆம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தான் இந்தியாவிற்கு வரவில்லை.

2012ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் மற்றும் 20 ஓவர் தொடரில் அந்த அணியில் இடம்பெற்றிருந்தார் 37 வயதான முகமது இர்பான். சுமார் 7.1 அடி உயரம் உள்ள அவர் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளராக விளையாடினார். அந்த தொடரில் இந்திய அணி எதிர்பார்த்த அளவிற்கு விளையாடாமல் சொதப்பியது. இந்த நிலையில் கிட்டத்தட்ட ஏழு வருடங்களுக்கு பிறகு அந்த தொடரை குறித்து முகமது இர்பான் பேசியுள்ளார். அந்த தொடரில் என்னுடைய பந்துவீச்சை சந்திப்பதற்கு கௌதம் கம்பீர் பயந்தார் என்றும், அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையே என்னுடைய பந்து வீச்சினால் தான் முடிவுக்கு வந்தது என்றும் பேசியுள்ளார்.  மேலும் அந்த தொடரில் 6 போட்டிகளில் 4 போட்டிகளில் நான் அவரை வீழ்த்தினேன்.

அதேபோல இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலி, அப்பொழுது என்னுடைய பந்துவீச்சை சந்திக்கவே பயந்தார் எனவும், என்னுடைய பந்துவீச்சை கணிக்க முடியாமல் அவர் தடுமாறினார் எனவும், நான் சுமார் 130 முதல் 135  கிலோ மீட்டர் வேகத்தில் வீசிக் கொண்டிருந்தேன். ஆனால் கோலிக்கு எதிராக 145 கிலோ மீட்டர் வேகத்தில் வீசினேன் எனக்கு ஆச்சரியம் அளித்தது. என்னுடைய பந்தை அடிக்க முயன்று ஏமாற்றத்துடன் திரும்பினார் விராட் கோலி. அந்த தொடர் முழுவதும் காம்பிர், கோலி உள்ளிட்ட இந்திய வீரர்களை திணறடித்தேன் என பேசியுள்ளார்.

அந்தத் தொடருக்கு பிறகு முகமது இர்பான், பாகிஸ்தான் அணியின் முதன்மையான பந்துவீச்சாளராக இல்லை என்பது குறிப்பிடதக்கது. கடந்த 2016ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அந்த அணியில் இடம் பெற முடியாமல் தவிக்கும் முகம்மது இர்பான், இந்திய அணியின் ஆக்ரோஷமான வீரர்களாக அறியப்பட்ட கௌதம் கம்பீர் கோலியை வம்புக்கு இழுத்திருப்பது ரசிகர்களிடையே கொந்தளிப்பை உண்டாக்கியுள்ளது. இருவருமே உடனுக்குடன் பதிலடி கொடுக்கக் கூடியவர்கள் என்பதால் நிச்சயமாக கௌதம் காம்பிர் அவர்களிடமிருந்து பதிலடியை எதிர்பார்க்கலாம் என எதிர்பார்க்கபடுகிறது.