இலங்கை அணி வெற்றி…!

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது 20 க்கு 20 போட்டியில் இலங்கை அணி 35 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இதன் மூலம் இலங்கை அணி, பாகிஸ்தான் அணியுடனான மூன்று போட்டிகளைக் கொண்ட 20 க்கு 20 தொடரை 2க்கு 0 என கைப்பற்றியுள்ளது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது.

இதன்படி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 182 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அதன்பின்னர் 183 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 19 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 147 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.

போட்டியின் ஆட்டநாயகனாக பானுக ராஜபக்ஷ தெரிவானார்.