சிரஞ்சீவி நடித்த சைரா படத்தின் பிரமாண்ட வசூல்..!!

தெலுங்கு நடிகர் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நீண்ட வருடங்களாக அரசியலில் இருந்தவர். சில வருடங்களுக்கு முன்பு மீண்டும் சினிமா பக்கம் வந்தார். அவர் ரீஎண்ட்ரி கொடுத்த கைதி 150 படம் மெகா ஹிட் தந்தது.

இதை தொடர்ந்து சமீபத்தில் சைரா படம் திரைக்கு வந்தது. இந்த படம் விமர்சனத்தில் மட்டுமில்லாமல் வசூல் ரீதியாகவும் பயங்கர வரவேற்பை பெற்றுள்ளது.

மூன்று நாட்கள் முடிவில் இந்த படம் ரூ 130 கோடி வசூலை உலகம் முழுவதும் தாண்டியிருக்கும் என்று பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்திருக்கிறது.

மேலும், விடுமுறை தினம் தொடங்கிவிட்டதால் எப்படியும் ரூ 200 கோடி கிளப்பில் இந்த படம் இணையும் என்றும் கூறப்படுகின்றது.