காயத்தால் அவதிப்பட்டு வந்த இந்திய கிரிகெட் வீரர் மீண்டும் களத்தில் இறங்குகின்றார்..!!

காயத்தால் அவதிப்பட்டு வரும் இந்திய கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரரான ஹர்திக் பாண்டியாவுக்கு, இங்கிலாந்தில் வெற்றிகரமாக அறுவைசிகிச்சை நடந்து முடிந்துள்ளது.

கீழ் முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக விளையாட முடியாத நிலை ஏற்பட்டதை தொடர்ந்து, ஹர்திக் இங்கிலாந்து சென்று வைத்திய ஆலோசனை பெற்றார்.

இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘அறுவைசிகிச்சை வெற்றிகரமாக நடந்தது. இதற்கு மேலும் காத்திருக்க முடியாது. விரைவில் களமிறங்கும் நாளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்’ என்று புகைப்படத்துடன் தகவல் பதிந்துள்ளார்.