அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள்..!!!

பிறந்த மாதமானது ஒருவரின் குணாதிசயங்களையும், நடத்தையையும் தீர்மானிக்கும் என்பது பரவலான நம்பிக்கையாகும். இது உண்மைதான், ஏனெனில் ஒருவரின் பிறந்த மாதம் அவர்களின் தனிமனித ஆளுமை மீது தாக்கத்தை ஏற்படுத்தும். அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களுக்கு என்று சில தனித்துவமான குணங்கள் இருக்கிறது.
இவர்களின் இந்த தனிப்பட்ட குணங்கள் இவர்கள் மற்றவர்களிடம் இருந்து பிரித்து காட்டுகிறது. அனைவருக்குள்ளும் நல்ல குணங்களும், கெட்ட குணங்களும் இருக்கும், இதற்கு அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்கள் ஒன்றும் விதிவிலக்கல்ல. இந்த பதிவில் அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களின் நல்ல மற்றும் தீய குணங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

வசீகரமானவர்கள் அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்கள் வசீகரமானவர்கள், மேலும் அனைவரின் இதயங்களையும் அவர்களின் அழகான அணுகுமுறையால் வெல்லும் திறனை அவர்கள் கொண்டுள்ளனர். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களிடையே மிகவும் பிரபலமாக இருப்பார்கள், மேலும் அனைவரும் தங்கள் நண்பராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இவர்கள் சந்திக்கும் அனைவரிடமும் ஒரு நேர்மறையான அணுகுமுறையை கொண்டிருப்பார்கள். இவர்கள் மிகவும் ஆற்றல் மிக்கவர்கள், எனவே எல்லோரும் இவர்களைப் போலவே இருக்க விரும்புவார்கள்.
காதலில் சிறந்தவர்கள் அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்கள் யாரையாவது அல்லது எதையாவது விரும்பினால் அவர்களுக்கு அது எவ்வளவு முக்கியம் என்பதை நிரூபிக்க எந்த எல்லைக்கும் செல்வார்கள்.

எனவே அவர்களின் அன்பின் மீது எப்பொழுதும் சந்தேகப் படாதீர்கள். இவர்களின் இனிமையான குணத்தாலும், அணுகுமுறையாலும் இவர்களின் மீது பலரும் காதலில் விழுவார்கள். ஆனால் இவர்கள் மீது ஒருமுறை நீங்கள் காதலில் விழுந்துவிட்டால் அதை நினைத்து நீங்கள் பயப்பட வேண்டிய அவசியமிருக்காது.நிலையான உணர்ச்சிக் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள், ஆனால் அதனை எப்படி தனக்குள்ளேயே வைத்துக்கொள்ள வேண்டும் என்று இவர்கள் நன்கு அறிவார்கள். தங்களின் கோபத்தையோ, கவலைகளையோ இவர்கள் மற்றவர்களிடம் காட்ட மாட்டார்கள். வாக்குவாதத்தில் ஈடுபடுவதையோ, தேவையில்லாத சச்சரவுகளில் ஈடுபடுவதையோ இவர்கள் விரும்பமாட்டார்கள். இவர்கள் ஒருபோதும் மற்றவர்களை எடைபோட மாட்டார்கள். நீங்கள் சாய்வதற்கு எப்போதும் தோள்களை தயாராக வைத்திருப்பார்கள்.

அமைதியானவர்கள் இவர்களின் அமைதி இவர்களுடைய தனிப்பட்ட குணங்களில் ஒன்றாகும். இவர்கள் கோபப்படுவதை பார்ப்பது என்பது மிகவும் அரிதான ஒன்றாகும், அப்படி அவர்கள் கோபப்பட்டால் அவர்களால் தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு நீங்கள் பெரிய தப்பை செய்திருக்க வேண்டும். இவர்களுக்கு எப்போதும் எதிரிகளை விட நண்பர்களே அதிகம் இருப்பார்கள். அனைவரிடமும் இருக்கும் நல்ல குணத்தைத்தான் இவர்கள் முதலில் பார்ப்பார்கள்.

இலட்சியமிக்கவர்கள் அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்கள் ஏதாவது ஒன்றை செய்ய நினைக்கும் போது, அவர்கள் தங்கள் இலக்குகளை அடையும் வரை தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருப்பார்கள். கடைசி நிமிடம் வரை காத்திருந்து எதையும் முடிக்க மாட்டார்கள், குறித்த நேரத்திற்கு முன்னரே எதையும் செய்து விடுவார்கள். கடினமானதாக இருந்தாலும் ஒருபோதும் வேலையை முடிக்காமல் பின்வாங்க மாட்டார்கள்.

தீர்வு வழங்குபவர்கள் இவர்களிடம் அனைத்து கேள்விகளுக்கும் ஒரு பதில் இருக்கும், அதேசமயம் அனைத்து பிரச்சினைகளுக்கும் இவர்களிடம் தீர்வு இருக்கும். இவர்கள் கூறுவது பெரும்பாலும் சரியானதாகத்தான் இருக்கும். சூழ்நிலையை ஆராய்ந்து அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு முடிவுடன் இவர்கள் வருவார்கள். இவர்கள் பிரச்சினைகளை முடிக்கும் வேகம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும்.

பிடிவாதக்காரர்கள் மற்ற அனைவரையும் விட இந்த மாதத்தில் பிறந்தவர்கள் மிகவும் பிடிவாதக்காரர்களாக இருப்பார்கள். இவர்கள் ஒரு இலக்கை வைத்து விட்டால் அதிலிருந்து இவர்களை திசை திருப்பவது மிகவும் கடினமாகும். இது ஒருவகையில் நல்லதாக இருந்தாலும் பலவகையில் இவர்களுக்கே பிரச்சினையாக முடியும். இவர்கள் தங்களுக்குள்ளேயே போட்டி போட்டுக் கொள்ளுவார்கள். இந்த பிடிவாதத்தால் இவர்கள் உடனிருப்பவர்களும் பாதிக்கப்படலாம்.

ஆதிக்கம் செலுத்துவது இவர்கள் மற்றவர்கள் மீது அக்கறையாக இருந்தாலும் அவர்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள். இது அவர்களின் தலைமைப் பண்புக்கான அடையாளம் ஆகும், இதன்மூலம் இவர்கள் மற்றவர்களை தங்கள் எண்ணங்களுக்கு போல செயல்பட வைப்பார்கள்.

சந்தேகம் இவர்களின் நம்பிக்கையை பெறுவது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும். இவர்களின் சந்தேக குணம் பலரையும் காயப்படுத்தும், மேலும் இது இவர்களின் நெருங்கிய நண்பர்களிடம் கூட தவறான புரிதலை ஏற்படுத்தும். இவர்களுக்குள் இருக்கும் ரகசியங்களையும், எண்ணங்களையும் ஒருபோதும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள்.

பழிவாங்குதல் இவர்களுக்குள் பழிவாங்கும் எண்ணம் அதிகமாக இருக்கும். தங்களின் வழியில் குறுக்கிடுபவர்களை நிச்சயம் பழிவாங்காமல் விடமாட்டார்கள். அதேசமயம் இவர்களின் மனக்கசப்பு பழிவாங்கும் வரை போகாது. துரோகம் என்பது இவர்களால் தாங்கிக் கொள்ள முடியாத ஒன்றாகும்.