25 வருட சித்துவின் சிக்ஸர் சாதனையை சிதறடித்த ரோஹித் சர்மா!

தென்னப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக முதல் முறையாக அறிமுகமான இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரோஹித் சர்மா இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்து அசத்தியுள்ளார். முதல் இன்னிங்சில் 176 ரன்களை குவித்தவர் இரண்டாவது இன்னிங்சில் 127 ரன்களை குவித்து, மொத்தம் இந்த ஆட்டத்தில் 303 ரன்களை குவித்தார்.

இந்த ஆட்டத்தில் முதல் இன்னிங்சில் 6 சிக்சர்களை விளாசிய ரோஹித் சர்மா, இரண்டாவது இன்னிங்சில் 7 சிக்ஸர்களை விளாசி ஆக மொத்தம் 17 சிக்ஸர்களை இந்த ஆட்டத்தில் மட்டும் அவர் விளாசியுள்ளார். இதன் மூலம் அவர் பல சாதனைகளை செய்துள்ளார்.  இந்திய அணியின் வீரர்கள் ஒரே டெஸ்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சுமார் 25 வருடங்களுக்கு முன்பு 1994 ஆம் ஆண்டு இந்திய அணியின் முன்னாள் வீரர் நவஜோத் சிங் சித்து இலங்கைக்கு எதிராக 8 சிக்ஸர்களை அடித்து இருந்தார். தற்போது அந்த சாதனையை முறியடித்த ரோகித் சர்மா 13 சிக்சர்களை அடித்து உள்ளார்.

13 ரோஹித்
8 சித்து
7 சேவாக்
7 ஹர்பஜன்
7 ரஹானே
7 பாண்டியா

மேலும் இந்தியாவில் நடைபெற்ற ஒரு போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த ஆட்டமாக இந்த ஆட்டம் இடம்பெற்றுள்ளது. இதற்கு முன்பாக 2009ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக இந்திய அணி விளையாடிய போட்டியில் இந்தியா இலங்கை இரண்டு அணிகளும் சேர்ந்து 20 சிக்ஸர்கள்  அடித்திருந்தது. அதேபோல கடந்த ஆண்டு ராஜ்கோட்டில் விளையாடிய போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய வெஸ்ட் இண்டீஸ் அணிகள் 20 சிக்ஸர்கள் அடித்து இருந்தது. அந்த இரண்டு போட்டிகளின் சாதனைகளையும் தகர்த்து இந்த போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளது.

27*Ind vs SA Vizag 2019/20
20 Ind vs SL Mumbai BS 2009/10
20 Ind vs WI Rajkot 2018/19

தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக 50க்கும் மேற்பட்ட சிக்சர்களை சர்வதேச போட்டியில் பதிவு செய்துள்ளார் ரோஹித் சர்மா. தொடர்ச்சியாக ஒரு வீரர் மூன்று வருடங்களில் அடிப்பது இதுவே முதல்முறை ஆகும். இந்த சாதனை பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் சிக்சர் மன்னன் கிறிஸ் கெய்ல் மூன்று முறை இடம் பெற்றுள்ளார். அதற்கடுத்தபடியாக பாகிஸ்தானின் ஷாஹித் அப்ரிடி இரண்டு முறையும் இந்த சாதனையை செய்துள்ளார்.

2017 – 65 6s
2018 – 74 6s
2019 – 50+ 6s*

ரோஹித் – 3 (2017, 2018, 2019)*
கெய்ல் – 3 (2009, 2012, 2019)
அப்ரிடி – 2 (2002, 2005)

இந்த போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் இந்திய அணியின் சார்பில் சர்வதேச ஒருநாள் போட்டி, சர்வதேச 20 ஓவர் போட்டி, சர்வதேச டெஸ்ட் போட்டி ஆகிய மூன்று வடிவங்களிலும் ஒரு போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோஹித் சர்மா முதலிடம் பிடித்துள்ளார்.

டெஸ்ட்: ரோஹித் சர்மா 13 v தென்னாபிரிக்கா விசாகபட்டினம் 2019/20
ODI: ரோஹித் சர்மா 16 v ஆஸ்திரேலியா பெங்களூரு 2013
T20I:  ரோஹித் சர்மா 10 v இலங்கை இந்தூர் 2017