நிறைய கணவன் மனைவிக்கு கொடுக்கும் பொய்யான 5 வாக்குறுதி

நம் வாழ்வில் எப்போதும் யாருக்காவது வாக்குறுதி கொடுத்து கொண்டே தான் இருப்போம். அதிலும் நாம் நேசிக்கும் ஒருவருக்கு கொடுக்கும் வாக்குறுதியில் பல நிறைவேற்ற படாமலே இருக்கும். பெரும்பாலும் கணவன் மனைவிக்கு கொடுக்கும் வாக்குறுதிகள் நிறைவேறினால் மட்டுமே நிஜம் என்பதை போல் தான் இருக்கும். சில சூழலில் அவர்களின் வாக்குறுதிகள் பொய்யாக மாறிவிடும். அலுவலகம் முடிந்து விரைவில் வந்துவிடுவேன் வெளியில் செல்லலாம் என கணவர் கொடுத்த வாக்குறுதியை நம்பி மனைவி தயாராக இருக்கும் போது, அலுவலக பளுவின் காரணமாக வர தாமதமானால் அதற்கு  காரணம் சூழ்நிலையே, அவர்கள் அல்ல. இங்கு கணவன் மனைக்கு கொடுக்கும் பொய்யான 5 வாக்குறுதிகளை பார்க்கலாம்.

1 உன்னை தவிர எந்த பெண்ணையும் பார்க்கமாட்டேன்

இது தான் கணவன் மனைவிக்கு கொடுக்கும் முதல் வாக்குறுதி. ஆனால் இந்த வாக்குறுதியை ஒரு சிலரே காப்பாற்ற முடியும். பெரும்பாலும் இதனை காப்பாற்றுவது என்பது கடினம். வெளியிடங்களுக்கு செல்லும் போது, ஒரு பெண் அழகாக இருந்தால் அவளை பார்ப்பது அனைவரது இயல்புதான். மனைவி உடன் வெளியிடங்களுக்கு செல்லும் போது, ஏதாவது ஒரு பெண்ணை கணவர் பார்ப்பதை அறிந்து மனைவி அந்த பெண்ணை பார்த்தீர்களா என்றால், அவளின் முழு அடையாளத்தையும் கூறி இல்லை எனும் கணவரை பார்க்கும் சில மனைவிக்கு பொறாமையும், சிலருக்கு சிரிப்பும் வரும். இது போன்ற தருணங்களில் அவர்களின் வாக்குறுதி பொய்யாகி விடும்.

2 உனக்கு பிடித்தவை எனக்கும் பிடிக்கும்

திருமணத்திற்கு பிறகு நம் வாழ்க்கைத்துணைக்கு பிடித்தது, பிடிக்காதது என்று அனைத்தையும் அனுசரித்து செல்வோம் என்று நினைத்து தம்மை மாற்றிக் கொள்ள நினைப்போம். ஒரு சிலர் மாறலாம். ஆனால் உண்மையில் ஒருவர் மாறுவது என்பது மிகவும் கடினமான ஒன்று. “உனக்கு பிடித்த பாடல், அது எனக்கும் பிடிக்குமே” எனும் பாடல் வரிகளை கேட்டிருப்போம். திருமணத்தின் பல கணவர்கள் கூறுவதும் இது போலத் தான். உனக்கு பிடித்தவை அனைத்தும் எனக்கும் பிடிக்கும் என்பார்கள். ஆனால், அவர்கள் விரும்பி கேட்கும் பாடல் ஒலிக்கும் போது அவர்கள் அதை வைக்க சொல்லியும் கேட்காமல், கிரிக்கெட் பார்ப்பார்கள் பெரும்பாலான கணவர்கள். இங்கும் மாயமாகிறது வாக்குறுதி.

3 ஞாயிற்று கிழமை சமையல்

எப்போதும் பெண்கள் தான் வீட்டில் சமைப்பார்கள். அவர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காகவே, அவர்களாகவே கொடுக்கும் வாக்குறுதி. ஆனால் இந்த வாக்குறுதி ஒரு சில நாட்களுக்கு கண்டிப்பாக நடக்கும். ஆனால் போக போக இந்த பழக்கம் மாறிவிடும். அப்போது அவர்கள் கொடுத்த வாக்குறுதி காணாமல் போய்விடும்.

4 உனக்கு பிடிக்கவில்லை என்றால் செய்யமாட்டேன்

உங்கள் வாழ்க்கைத்துணைக்கு பார்ட்டிக்கு போவது, குடிப்பது மற்றும் புகைபிடிப்பது போன்றவை பிடிக்கவில்லை என்றால், இனி கட்டாயம் செய்யமாட்டேன் என்று சொல்வீர்கள். ஆனால் அது நண்பர்களின் வேண்டுகோளாலும் மற்றும் ஏதோ ஒரு நிலையிலும் வாழ்க்கைத்துணையிடம் பொய் சொல்லி செய்ய வேண்டி வரும். அப்போது அந்த வாக்குறுதி மறைந்துவிடும்.

5 இனிமேல் சரியாக செய்வேன்

வாழ்க்கைத்துணை ஏதாவது சொல்லி, கணவர் அதை செய்யாமல் சண்டை வந்தாலும், அப்போது இனிமேல், இந்த தப்ப மறுபடியும் செய்ய மாட்டேன்” என்று சொல்வார்கள். ஆனால் சில வாரத்தில் அந்த வாக்குறுதி காற்றோடு போய்விடும். ஏனெனில் இயற்கையில் மனிதனின் குணங்களை எளிதில் மாற்றுவது என்பது கடினம். உதாரணமாக, எப்போதும் ஒரு இடத்திற்கு சரியான நேரத்திற்கு செல்ல வேண்டும் என்று நினைப்பர். ஆனால் நீங்கள் அதற்கு எதிர்புறமாக இருப்பீர்கள். அந்த நேரத்தில் இந்த வாக்குறுதியை பல முறை கொடுப்பீர்கள். ஆனால் அது ஒவ்வொரு முறையும் நடக்காமல் பொய்யாகிக் கொண்டே இருக்கும்.