தயிரில் இருக்கும் லாக்டிக் அமிலம்..!!!

நம்மில் பல பேருக்கு தயிர் சாப்பிட்டால் நன்மை என்பது மட்டும் தெரியும். ஆனால், அது பலவிதமான நோய்களுக்கு மருந்தாக இருக்கும் என்பது தெரிவதில்லை. அது குறித்து இங்கு விவரமாகப் பார்க்கலாம். சூரிய ஒளியின் காரணமாக பாதிக்கப்படும் நரம்புகளையும், தோல் பகுதிகளையும் தயிர் தனது ஆரோக்கியமான கலவைகளால் பாதுகாக்கிறது.

பழச்சாறு உடலுக்கு தேவையான வைட்டமின் சி யை கொடுக்கின்றது. அதுபோலதான் தயிரும் பழச்சாறுக்கு இணையான சத்துக்களைக் உடம்பிற்கு வழங்குகிறது. மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கும் சிறந்த தீர்வை கொடுக்கிறது. மேலும், வயிற்றுப் போக்குக்கு காரணமாகும் கிருமிகள் மற்றும் அப்ரண்டீஸ் உள்ளிட்டவற்றை குணப்படுத்தவும் தயிர் மோரில் சத்து இருக்கின்றது.

இதில் இருக்கும் லாக்டிக் அமிலம் காரணமாக அனைத்தும் விரட்டியடிக்கப்படும். மஞ்சள் காமாலை இருக்கும் போது தயிரிலோ, மோரிலோ சிறிதளவு தேனை கலந்து சாப்பிடுவது மிகச்சிறந்த பலனை நமக்கு அளிக்கும். மலம் கழித்த பிறகு சிலருக்கு மலக்குடலில் எரிச்சல் ஏற்படுகின்றது

அப்பொழுது தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கொண்டு இதனை குணப்படுத்த முடியும். மேலும் சில தோல் வியாதிகளுக்கு மோரில் நனைந்த துணியை பாதிக்கப்பட்ட இடத்தில் கட்டி வருவது சிறந்த மருந்தாக இருக்கும். தோல் வீக்க நோய்க்கு மோர் கட்டு அருமையான மருந்தாகச் செயல்படும்.