இறந்தவரை கனவில் கண்டால் என்ன பலன்?!

1. பங்குனி மாதத்தில் வீடு கட்ட தொடங்கலாமா?

பங்குனி மாதத்தில் வீடு கட்ட தொடங்குவதை தவிர்க்கவும்.

2. என் காதலன் என்னை திருமணம் செய்து கொண்டது போல் கனவு கண்டால் என்ன பலன்?

இந்த மாதிரி கனவு கண்டால் சுபச்செய்திகளால் சுப விரயம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. தேங்காய் பூவை கனவில் கண்டால் என்ன பலன்?

தேங்காய் பூவை கனவில் கண்டால் புதிய வாய்ப்புகளால் முன்னேற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. லக்னத்தில் குரு இருந்தால் என்ன பலன்?

பரந்த மனப்பான்மை உடையவர்கள்.

சிறப்பான பேச்சாற்றல் உடையவர்கள்.

பெரிய நபர்களின் நட்புகளை உடையவர்கள்.

இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. இறந்தவரை கனவில் கண்டால் என்ன பலன்?

இறந்தவரை கனவில் கண்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்பதைக் குறிக்கின்றது.

6. பொருள் கொடுத்து பணம் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

பொருள் கொடுத்து பணம் வாங்குவது போல் கனவு கண்டால் தேவை அறிந்து செலவுகளை மேற்கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

7. பால் பொங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

பால் பொங்குவது போல் கனவு கண்டால் பொருட்சேர்க்கை ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

8. சாணியை சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

சாணியை சாப்பிடுவது போல் கனவு கண்டால் தனவரவு மேம்படும் என்பதைக் குறிக்கின்றது.

9. வாழையிலையில் சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

வாழையிலையில் சாப்பிடுவது போல் கனவு கண்டால் மனதில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.

10. கடவுளிடம் உயிரை காணிக்கையாக தருவதாக கூறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

இந்த மாதிரி கனவு கண்டால் வேண்டுதல் நிறைவேற்றப்படாமல் இருக்கும் என்பதைக் குறிக்கின்றது.