மொரட்டுவவில் ராவதவட்டை பகுதியில் கைக்குண்டுகள் மீட்பு!

மொரட்டுவ ராவதவட்டை பகுதியில் வெற்று காணியில் இருந்து மூன்று கைக் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் எஸ்.பி.ருவன் குணசேகர தெரிவித்தார்.

மூன்று குண்டுகளும் பழுதடைந்த நிலையில் இருந்தன.

அவற்றை விமானப்படையினர் செயலிழக்கச் செய்துள்ளனர். இதனால் ஏற்பட்ட சத்தத்தால் அந்த பகுதி வாசிகளிடையே பதற்றம் ஏற்பட்டது!