இந்த திதியில் பிறந்தவர்கள் சிந்தித்து முடிவெடுக்கும் வல்லமை கொண்டவர்கள்.!

திதி என்பது சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே உள்ள தொலைவு ஆகும். திதி பஞ்சாங்கத்தில் ஒரு முக்கிய பகுதியாகும்.

அமாவாசை தினத்தில் சூரியனும், சந்திரனும் ஒரே தீர்க்கரேகையில் இருக்கும். இந்த இரண்டிற்கும் இடையே உள்ள தீர்க்கரேகை வித்தியாசத்தின் அடிப்படையில்தான் திதிகள் தோன்றுகின்றன.

அமாவாசை நாளையும், பூரணை(பௌர்ணமி) நாளையும் அடுத்து வரும் மூன்றாவது திதி திருதியை ஆகும்.

அமாவாசையை அடுத்துவரும் திருதியை சுக்கில பட்ச திருதியை என்றும், பூரணையை(பௌர்ணமி) அடுத்துவரும் திருதியை கிருஷ்ண பட்ச திருதியை என்றும் அழைக்கின்றனர்.

அந்த வகையில், திருதியை திதியில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

திருதியை திதியில் பிறந்தவர்களின் குணநலன்கள் :

நல்ல குணநலன்களை உடையவர்கள்.

தூய்மையானவர்கள்.

கீர்த்தி உடையவர்கள்.

உடல் பலம் கொண்டவர்கள்.

👉 அறச்செயல்களில் ஈடுபடக்கூடியவர்கள்.

👉 முரட்டுக்குணம் கொண்டவர்கள்.

👉 எதையும் சிந்தித்து முடிவெடுக்கும் வல்லமை கொண்டவர்கள்.