13 வயது மாணவியை கர்ப்பமாக்கிய 62 வயது முதியவர்: யாழில் சம்பவம்!

யாழில் 62 வயது முதியவரால் தொடர் பாலியல் வன்புணர்விற்குள்ளாக்கப்பட்ட 13 வயது சிறுமி 3 மாத கர்ப்பவதியாக இருப்பது தெரிய வந்துள்ளது.

முதியவர் இன்றிரவு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மானிப்பாய் முத்துதம்பி வீதியை சேர்ந்த 13 வயதான சிறுமியொருவரே வன்புணர்விற்குள்ளாக்கப்பட்டுள்ளார். சிறுமியின் அயல்வீட்டை சேர்ந்த 62 வயதான நபரே இந்த பாதகத்தை புரிந்துள்ளார்.

மூன்று மாதங்களின் முன்னர் சிறுமிக்கு ரொபி கொடுத்து, ஆசைகாட்சி வன்புணர்விற்குள்ளாக்கியுள்ளார்.

இந்த நிலையில் சிறுமியின் உடலில் ஏற்பட்ட மாற்றங்களையடுத்து, அவர் இன்று யாழ் போதனா வைத்தியசாலையில் பரிசோதனைக்குள்ளாக்கப்பட்டார். இதன்போது, சிறுமி 3 மாத கர்ப்பவதியாக இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து, சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அயல் வீட்டிலுள்ள முதியவரை தன்னை வல்லுறவிற்குள்ளாக்கியதாக தெரிவித்துள்ளார்.

அயல்வீட்டிலிருந்து 62 வயது மதியவரை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தியபோது, குற்றத்தை புரிந்ததாக ஒப்புக் கொண்டுள்ளார். அவர் நாளை நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்.