வடஅயர்லாந்து கருக்கலைப்புச் சட்டம் மனித உரிமைகளை மீறுகிறது

வட அயர்லாந்தின் கருக்கலைப்புச் சட்டம் பிரித்தானியாவின் மனித உரிமைக் கடமைகளை மீறுகிறது என்று பெல்பாஸ்ட் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

தாயின் உயிருக்கு நேரடி அச்சுறுத்தல் அல்லது அவரது உடல்,உள ஆரோக்கியத்திற்கு நிரந்தர மற்றும் கடுமையான சேதம் ஏற்படும் அபாயம் இல்லாவிட்டால் வட அயர்லாந்தில் கருக்கலைப்பு சட்டவிரோதமானதாகும்.

கற்பழிப்பு, முறையற்ற புணர்ச்சி அல்லது அபாயகரமான கருவின் அசாதாரணம் ஆகியவை கருக்கலைப்பின் காரணங்களாக எடுத்துக்கொள்ளப்பட முடியாத காரணத்தால் பெண்கள் வேறு இடங்களுக்கு சென்று கருக்கலைப்புச் செய்யவேண்டிய நிலை காணப்படுகிறது.

2013 ஆம் ஆண்டில் வட அயர்லாந்தில் குழந்தைக்கு மூளைக் குறைபாடு இருப்பதாகக் கூறப்பட்டதையடுத்தும் கருக்கலைப்பு மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து சாரா எவேர்ட், லண்டன் சென்று கருக்கலைப்பு செய்ததன் பின்னர் அவரால் இந்த வழக்கு தொடரப்பட்டது.

காலாவதியான சட்டங்களுக்கு எதிரான பிரசாரத்தில் இந்தத் தீர்ப்பு பெண்களுக்கு ஒரு திருப்புமுனை என்று வழக்கு தொடர்ந்த சாரா எவேர்ட் தெரிவித்துள்ளார்