நீராவியடியில் பிக்குகள் அரங்கேறிய அடாவடிகளை கண்டித்து பிரான்சில் தமிழர்கள் போராட்டம்!

முல்லைத்தீவு செம்மலையில் இறந்த தேரர் உடலை நீதிமன்ற உத்தரவை மீறி நீராவியடி பிள்ளையார் கேணியின் வளாகத்தில் அத்துமீறி எரித்த சிங்கள பிக்குகளின் அடாவடியைக் கண்டித்து பிரான்சில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைப்புக் குழுவினரால் ஒருங்கிணைக்கப்பட்ட போராட்டத்தில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.