ஊருக்குள் பிரவேசித்த சுமார் 35 க்கும் அதிகமான யானைகள்..

மட்டக்களப்பு, காரைதீவு – மாவடிப்பள்ளி எல்லையை கடந்து ஊருக்குள் பிரவேசித்த சுமார் 35 க்கும் அதிக யானைகளைக் கட்டுப்படுத்தி அவ்விடத்தில் இருந்து அகற்றுவதற்கு வனவிலங்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இன்று திங்கட்கிழமை (30) மாலை காட்டு யானைகள் கூட்டமாகக் கிராமத்துக்குள் நுழைந்தன. இதனால் அச்சமுற்ற மக்கள் வனவிலங்குத் திணைக்கள அதிகாரிகளுக்கு சம்பவத்தை தெரியப்படுத்தினர்.

அங்கு வந்த வனவிலங்கு அதிகாரிகள் குறித்த யானைகளை அவ்விடத்திலிருந்து வெளியேற்ற வெடிகளைப் பயன்படுத்தி விரட்டினர்.

இதை வேடிக்கை பார்க்க பெரும் திரளான மக்கள் கூடி கூக்குரல் இட்டதால் குழப்பமடைந்த யானைகள் நகராமல் ஓரிடத்தில் ஒதுங்கிக்கொண்டன.

இதனால் மாவடிப்பள்ளி பாலத்தில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.