ஈழத்தமிழரின் நம்பிக்கையை உடைத்த பிக்பாஸ்!

தர்க்ஷன் ஈழத்தமிழரின் நம்பிக்கை நட்சத்திரமாக தென்னிந்திய தொலைக்காட்சியின் பிக்பாஸ் 3 வலம் வந்துகொண்டிருந்தார். அவர் தான் வெற்றியை ததாக்குவார் என எல்லோரும் எதிர்பார்த்திருக்க பிக்பாஸின் நயவஞ்சகதால் வெளியேற்றப்பட்டுள்ளார்.

இது பலருக்கு அதிர்ச்சியையும் ஏமாற்றத்தினையும் அளித்துள்ளது. இந்த நிலையில் தர்க்ஷன் வெளியேற்றப்பட்டமை தொடர்பில் பலரும் சமூக வலைத்தளங்களினூடாக தமது நியாயமான கோபங்களையும் ஆதங்கங்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

அந்தவகையில் உமாகரன் ராசையா எனும் முகநூல்வாசி பதிவிட்டுள்ல விடயங்கள் உங்கள் பார்வைக்காக,

என் நண்பன் யுபேசின் ஆல்பத்தில் தர்சன் நடித்துக்கொண்டு இருந்தபோது அவரைப்பற்றி யுபேஷிம் பத்மயனும் நல்ல மாதிரி மட்டும் தான் சொல்லுவார்கள். அதிலிருந்து அவரின் கடின உழைப்பு பற்றி தெரியும்.

ஈழத்து கலைஞர்களின் ஒரே நம்பிக்கை அவர்களின் கடின உழைப்பு தானே.என்னதான் எங்கட ஆக்கள் உலக அளவில producer ஆக இருந்தாலும் எங்கட ஊரில short flim கூட எடுக்கமாட்டினம்.

நான் ஏற்கனவே ஒரு வீடியோ வெளியிட்டது பிக்பாஸ் பற்றி மட்டுமல்ல அந்த ஊடகத்தின் ஒட்டு மொத்த ஈழம்சார் நடவடிக்கை பற்றி தான்.

இந்த game show ஐ சரியானவிதத்தில் விளையாடி வந்த தர்சன் வெற்றி பெறுவார் என்று எல்லோரும் நம்பியது போல நான் நம்பவில்லை. காரணம் இந்தியாவின் சினிமா சார் படைப்புகள் யாவும் இப்போது அங்குள்ள சேரிகளின் பணங்களை பிடுங்குவதிலும் அவர்களை யோசிக்கவிடாமல் செய்வதிலும் குறியாக உள்ளன.

அந்த வகையில் அப்படியான ஒருவர் தான் வெல்வார் தவறினால் மலேசியாவே இலக்கு.இதனால் சேரிகளுக்கு ஒரு நன்மையும் இல்லை.சிந்தித்து கேள்விகேட்க தொடங்கி இருப்பவர்களை பப்பாவில் ஏற்றி இல்லாமலாக்கும் திட்டம். சேரி மக்களின் மிகப்பெரிய வாக்குவங்கியை இதுவரை சிதைத்தது போல் இனியும் வைத்திருப்பதே நோக்கம்.

அரசியலில் மட்டுமல்ல ஊடகங்களின் TRP போட்டிக்கும் இவர்களே பலிக்கடா.

அது ஒருபக்கம் இருக்க, மக்கள் மனதில் இடம்பிடிப்பது என்பது மிகக்கடினமான விடயம் அந்த வகையில் கமல் கண்கலங்கியது எவ்வளவு பொய்யோ அதைவிட தர்சன் வென்று விட்டார் என்பதே 100 மடங்கு உண்மை.அதைவிட பெரிய வெற்றி எம் தன்மானத்தை எந்த இடத்திலும் விற்காமல் தர்க்ஷன் விளையாடியதுதான்.

உலகிலேயை மிகப்பெரிய Mafia இவர்கள். இவர்கள் ஈழத்தமிழர்களை கொல்லமாட்டார்கள். ஆனால் நம்மவர்களின் சிந்தனையாற்றலை கொல்வார்கள் என உமாகரன் ராசையா பதிவிட்டுள்ளார் .