விபத்தில் சிக்கிய நாகினி புகழ் நடிகை!

நாகினி தொடரின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகை மௌனி ராய், இதன் மூலம் பாலிவுட் பட வாய்ப்புகளும் அவருக்கு குவிந்து வருகிறது.

இந்நிலையில் மும்பையில் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக காரில் சென்றுள்ளார், அப்போது ஜுஹு என்ற இடத்தில் கார் நின்றுள்ளது.

அங்கே மெட்ரோ பணிகள் நடந்து கொண்டிருந்த நிலையில், பெரிய பாறை ஒன்று மௌனி ராயின் கார் மீது விழுந்துள்ளது.

இதில் கார் கண்ணாடி சுக்கு நூறாக உடைந்துவிட, அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்.

இதுபற்றி டுவிட்டரில் வீடியோவை வெளியிட்டுள்ளவர், என் காரின் மீது பாறை ஒன்று விழுந்து கார் சேதமைடைந்தது. சாலையை கடப்பவர்கள் யார் மீதாவது விழுந்திருந்தால் என்னவாகியிருக்கும்

சற்று சிந்தித்து பாருங்கள். மும்பை மெட்ரோவின் இத்தகைய பொறுப்பற்ற செயலுக்கு உங்களிடம் ஏதாவது ஆலோசனை உள்ளதா? என்று குறிப்பிட்டுள்ளார்.