முடி பிரச்னைக்கு தீர்வு தரும் செம்பருத்தி எண்ணெய்

இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலானோருக்கு முடி கொட்டுதல் பெரும் பிரச்னையாகவே உள்ளது.

இதற்கு பலரும் விளம்பரங்களில் காட்டப்படும் கண்ட கண்ட எண்ணெய்களை வாங்கி பயன்படுத்துவதுண்டு.

இதனை தவிர்த்து பலவகையான கூந்தல் பிரச்னைகளுக்கு செம்பருத்தி எண்ணெய் இயற்கை முறையில் நல்ல தீர்வினை வழங்குகிறது

குறிப்பாக செம்பருத்தி தலை முடி வளர்ச்சியை தூண்டும், உதிர்ந்த முடிகளை மீண்டும் வளர செய்யும்.

மேலும் கூந்தல் பளபளப்பாகவும், மென்மையாகவும் இருக்கும், தலை முடி அடர்த்தியை அதிகரிக்கும், பொடுகு தொல்லையை சரி செய்யும், தலை அரிப்பு மற்றும் நரைமுடிகளை தடுக்கும்.

அந்தவகையில் தற்போது செம்பருத்தி எண்ணெய் கொண்டு தலை முடி பிரச்னைக்கு எப்படி தீர்வு காண முடியும் என்பதை பார்ப்போம்.

தேவையானவை
செம்பருத்தி பூ – 10
செம்பருத்தி இலை – 10
தேங்காய் எண்ணெய் – 1/2 லிட்டர்
வேப்பிலை – ஒரு கைப்பிடி அளவு
கருவேப்பிலை – ஒரு கைப்பிடி அளவு
செய்முறை
முதலில் இந்த செம்பருத்தி எண்ணெய் செய்வதற்கு பிரஷ் ஆன 10 சிவப்பு செம்பருத்தி பூக்களும், 10 செம்பருத்தி இலைகளையும் பொடிதாக நறுக்கி, மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.

பின்பு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் 1/2 லிட்டர் தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடேறியதும், அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, அரைத்த கலவையை எண்ணெயில் சேர்க்க வேண்டும்.

பின்பு அதனுடன் சிறிதளவு வேப்பிலையை சேர்க்கவேண்டும்.

பிறகு இந்த எண்ணெயில் சிறிதளவு கறிவேப்பிலை சேர்க்க வேண்டும்.

செம்பருத்தி, கறிவேப்பிலை, வேப்பிலை போன்றவை நன்றாக எண்ணெயில் சேர்ந்ததும், அடுப்பை அணைத்து விட வேண்டும்.

பின்பு இந்த செம்பருத்தி எண்ணெயை நன்றாக ஆற வைத்து, வடிகட்டி பாட்டிலில் ஊற்றி பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த எண்ணெயை தலையில் தேய்த்து, சிறிது நேரம் மசாஜ் செய்து காலையில் தலைகுளிக்க வேண்டும். அல்லது தலை குளிப்பதற்கு முன் இந்த செம்பருத்தி எண்ணெயை தலையில் தேய்த்து மசாஜ் செய்து, சிறிது நேரம் கழித்து அதாவது 1/2 மணி நேரம் கழித்து, பின்னர் தலை குளிக்கவும்.

குறிப்பு
இந்த செம்பருத்தி எண்ணெயை தினசரி பயன்படுத்தும் கூந்தல் எண்ணெயாக கூட பயன்படுத்தலாம். இந்த எண்ணெயை வாரத்தில் இரண்டு முறையாவது கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.