பெண்ணின் பிறப்புறுப்பு கூறும் நன்மையான மற்றும் கேடான விஷயங்கள் என்னென்ன?..!!

பொதுவாக நமது உடல் நலத்தை கண்டறிய பல வழிகள் உள்ளது. அந்த வகையில்., நமக்கு காய்ச்சல் ஏற்பட போகிறது என்றால்., காய்ச்சலுக்கு முன்னர் ஏற்படும் சில அறிகுறிகள் வைத்தே நாம் அதனை கண்டுகொள்ள இயலும். இதனை போன்று ஒவ்வொரு பெண்களும் பெண்ணுறுப்பு கூறும் விஷயங்கள் என்னென்ன என்பது குறித்த குறைந்தளவு அறிந்திருக்கும் பட்சத்தில் பல பிரச்சனையில் இருந்து தப்பிக்க இயலும். பெண்ணுறுப்பு என்பது ஆரோக்கியமான ஒன்றுதான். பெண்ணுறுப்பில் இருந்து வெளியாகும் பாக்டீரியாக்கள் மற்றும் இறந்த செல்களின் மூலமாகவே இதனை நாம் அறிந்து கொள்ளலாம். பெண்ணுறுப்பில் இருந்து வெளியாகும் இரத்தத்தின் நிறத்தை பொறுத்து இது மாறுபடுகிறது. வெண்மை நிறத்தில் இரத்தம் வெளியேறினாலோ அல்லது நிறம் மற்றும் வெளியேறும் இரத்தத்தின் அளவு மாறும் பட்சத்திலும்., பிறப்புறுப்பு துர்நாற்றத்தின் மூலமாகவும் சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இது குறித்து அறிந்து வைத்திருப்பது சாலச்சிறந்தது.

நமது உடலில் நீர்சத்து குறையும் சமயத்தில்., உடலில் இருக்கும் திரவத்தினை சேகரித்து உடல் பயன்படுத்திக்கொள்ளும். இதனால் திரவத்தின் தன்மை பிசுபிசுப்புடன் இருக்கும். பிறப்புறுப்பில் இருந்து கெட்டித்தன்மையுடைய திரவம் வெளியேறும் பட்சத்தில்., உடலில் நீர் சத்து குறைவாக உள்ளது என்பதை அறிந்து., அதிகளவு நீரை அருந்த வேண்டும். பெண்களுக்கு மனஅழுத்தம் என்பது பல விதமான பிரச்சனையை ஏற்படுத்தும். அதிகளவு பதட்டம் மற்றும் மன அழுத்த பிரச்சனைகளுக்கு உள்ளாள்., ஹார்மோன்களின் சமநிலை பிரச்சனையில் மாற்றம் ஏற்பட்டு., பிறப்புறுப்பின் வெளிப்பாடும் அதிகளவு இருக்கும். மேலும்., மன அழுத்தத்தில் இருக்கும் சமயத்தில் மேற்கொள்ளப்படும் தாம்பத்யத்தால்., பிறப்புறுப்பு வறட்சி ஏற்பட்டு., பிறப்புறுப்பு வலியை ஏற்படுத்தும்.

நமது பிறப்புறுப்பில் pH-ன் அளவு சமநிலையான முறையில் இருக்கும். இந்த சமநிலை அளவு மாறும் பட்சத்தில்., பிறப்புறுப்பில் ஈஸ்ட் தொற்று உண்டாகி., இதனால் ஏற்படும் வெளியேற்றம் பாலாடைக்கட்டி போன்று இருக்கும். இதனால் பாக்டீரியா தொற்று ஏற்படவும்., அடர்நிற வெளியேற்றமும்., பிறப்புறுப்பு துர்நாற்றமும் ஏற்பட வாய்ப்புள்ளது. பாலியல் ரீதியாக பரவும் நோய்களை பொறுத்த வரையில்., யோனியின் வெளியேற்றத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும். ட்ரிகோமோனியாசிஸ் என்கிற பாலியல் நோய் இருக்கும் பட்சத்தில்., யோனியின் வெளியேற்றம் துர்நாற்றம் கலந்த மஞ்சள் நிறம் மற்றும் பச்சை நிறத்துடன் இருக்கலாம். இதனைப்போன்று சல்மோடியா என்கிற பாலியல் தொற்று இருந்தால் யோனியின் வெளியேற்ற அளவு வழக்கத்தை விட அதிகளவு இருக்கும்.

இனப்பெருக்க உறுப்புகளை பாதிக்கும் பாக்டீரியா தொற்றுக்கு காரணமாக இடுப்பு அழற்சி ஏற்படுகிறது. பெரும்பாலான பெண்கள் இதனை உணர்வது இல்லை. யோனியின் வெளியேற்றத்தில் கடுமையான துர்நாற்றம் மற்றும் கடும் இடிப்பு வலி ஏற்பட்டு இருக்கும் பட்சத்தில்., PID நோய்த்தொற்று காரணமாக கூட ஏற்பட்டு இருக்கலாம். பொதுவாக மாதவிடாய் துவங்குவதற்கு முன்னதாக யோனியின் வெளியேற்றம் ஏற்பட்டு., கருமுட்டை வெளியேறும் சமயத்தில்., வழக்கத்தை விட அதிகளவுக்கு வெளிப்பாடு இருந்தால்., அடிக்கடி யோனியை சுத்தம் செய்வதால்., கருமுட்டை வெளிப்பாடு உச்சத்தில் உள்ளீர்கள் என்று அர்த்தம்.

நாம் கர்ப்பமாக உள்ளோம் என்பதை பல விதமான அறிகுறிகள் வைத்து கண்டறியலாம். பொதுவானதாக மாதவிடாய் தடை மற்றும் மார்பக அளவுகளில் மாற்றம் போன்ற அறிகுறிகள் தென்படலாம். மேலும்., வழக்கமான யோனியின் வெளியேற்றத்தை விட., அதிகளவு வெளியேற்றமும் கர்ப்பத்தின் அறிகுயாக இருக்கலாம். இது உடலில் அதிகப்படியாக சுரக்கும் ஈஸ்டிரோஜன் காரணமாகவும் அமையலாம். இந்த நிகழ்வு பொதுவாக இயற்கையாக நிகழ்வது தான். நாம் அதிகளவு உற்சாகமான மனநிலையில் இருக்கும் பட்சத்தில்., வழக்கத்திற்கு மாறினான் யோனியின் வெளியேற்றம் ஏற்படும். இதனால் தாம்பத்திய நேரத்திலோ அல்லது பிற சமயத்திலோ மகிழ்ச்சி கட்டாயம் இரட்டையாக இருக்கும்.