பல்கலைக்கழகம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! என்ன தெரியுமா ??

பாகிஸ்தானின் பல்கலைக்கழகம் ஒன்றில் பிறப்பித்த உத்தரவில் மாணவர்களும், மாணவிகளும் ஒன்றாக சேர்ந்து அமர்ந்து பாடம் படிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமாபாத்தில் உள்ள பஹாரியா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆண், பெண் என இருபாலரும் தனித்தனியே அமர்ந்து பாடம் படிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

ஆண், பெண் இருவரும் சேர்ந்து வகுப்பறையில் உட்காருவதற்கு தடை விதிக்கப்படுவதாக கூறியுள்ள அவர், வகுப்பறைகள் இல்லாத நேரத்தில் மாணவ, மாணவிகள் பல்கலைக்கழக வளாகத்தில் சுற்றுவதோ, ஒரு கட்டடத்தில் இருந்து மற்றொரு கட்டடத்திற்கு செல்வதோ கூடாது எனவும் கட்டளையிட்டுள்ளதாக ஜியோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், வகுப்புகளுக்கு இடையில் மாணவர்களுக்கு கிடைத்து வந்த இடைவெளிகளை ரத்து செய்யவும் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.