சமநோக்கு நாளில் செய்ய வேண்டிய செயல்கள் இதுதான்…!

ல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள், சமநோக்கு நாள் இப்படியான வார்த்தைகளை தினசரி காலண்டரில் நம் கண்களில் நிச்சயம் பட்டிருக்கும். மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள் பற்றியும் அந்நாட்களில் நாம் செய்ய வேண்டிய செயல்களை பற்றியும் முந்தைய பதிவில் பார்த்தோம். இன்று சமநோக்கு நாள் என்றால் என்ன? இந்நாளில் என்னென்ன வேலைகளை செய்யலாம்? என்பதை பற்றி பார்ப்போம்.

சமமான வேலைகளை சமநோக்கு தினத்தில் செய்தால் நன்மை அளிக்கும்.

பூமிக்கு மேல்நோக்கி, கீழ்நோக்கி செய்யப்படும் செயல்கள் இல்லாமல் செய்யக்கூடிய செயல்களை செய்ய உகந்த நட்சத்திரங்களாக ஒரு சில நட்சத்திரங்களை நமது முன்னோர்கள் வகுத்துள்ளனர்.

இந்த சமநோக்கு நட்சத்திரங்கள் த்ரியக்முக் நட்சத்திரங்கள் என்றழைக்கப்படும்.

சமநோக்கு நாளுக்குரிய நட்சத்திரங்கள் :

அஸ்வினி

மிருகசீரிஷம்

புனர்பூசம்

அஸ்தம்

சித்திரை

சுவாதி

அனுஷம்

கேட்டை

ரேவதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்கள் சமநோக்கு நட்சத்திரங்கள் ஆகும்.

சமநோக்கு நாளில் செய்ய வேண்டிய செயல்கள் :

வாகனங்கள் வாங்குவதற்கு ஏற்ற நாள்.

வீட்டுக்கு தளம் அமைக்க நல்ல நாள்.

கால்நடைகள் வாங்குவதற்கு உகந்த நாள்.

நிலம் வாங்குவதற்கு சிறப்பான நாள்.

சாலை அமைப்பதற்கு சிறந்த நாள்.

கிரையம் செய்ய ஏற்ற நாள்.

கால்வாய் சீர்செய்வதற்கு நல்ல நாள்.

நிலத்தைப் பதப்படுத்துவதற்கு சிறப்பான நாள்.

வயல்களை உழுவதற்கு சிறந்த நாள்.

வாசற்கால் மற்றும் தூண் அமைக்க ஏற்ற நாள்.