தந்தை சொல்லை மீறி காதல் செய்த மகள்..!! கடைசியில் நடந்த விபரீதம்..!!

பொள்ளாச்சி வைகை நகரை சேர்ந்த கார்த்திகேயன் (56) என்பவர் கூலி தொழிலாளியாக இருந்து வருகிறார். இவருக்கு, ஒரு இளம்பெண் இருந்துள்ளார். கார்த்திகேயனின் மகள் ஒரு வாலிபருடன் நட்பாக பழகி வந்துள்ளார்.

இந்த நட்பானது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இருவரும் காதலித்து வந்த நிலையில், இவர்களின் விவகாரம் கார்த்திகேயன் குடும்பத்திற்கு தெரியவந்துள்ளது.

உடனடியாக தன்னுடைய மகளை கார்த்திகேயன் கடுமையாக கண்டித்துள்ளார். காதலை கைவிடுமாறு வற்புறுத்தியுள்ளனர் அந்த பெண்ணின் குடும்பத்தினர்.

ஆனால், அந்த பெண் தன்னுடைய காதலை கைவிட மறுத்துள்ளார். இதன் காரணமாக பெண்ணிற்கும், குடும்பத்திற்கும் ஒரு அசாதாரண உறவு நீடித்து வந்துள்ளது.

இந்நிலையில், அந்த பெண் தன்னுடைய பெற்றோரின் எதிர்ப்பை மீறி, தான் காதலித்து வந்த நபரையே திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

இதன் காரணமாக தன்னை மீறி காதல் திருமணம் செய்து கொண்ட மகளின் செயலால் குடும்பத்தினர் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளனர். அப்படி பட்ட சூழலில், கார்த்திகேயன் மனமுடைந்து வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு பொள்ளாச்சியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இருப்பினும் அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.