உல்லாசம் அனுபவிக்கும் போதே உயிரிழப்பு.! நிறுவனத்திற்கு வந்து சேர்ந்த தலைவலி.!

பிரான்சில் பாரிஸ் நகரை சேர்ந்த சேவியர் எக்ஸ் என்பவர் அலுவலகப் பணிக்காக மத்திய பிரான்ஸ் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கே அறிமுகமில்லாத ஒரு பெண்ணுடன் விடுதி ஒன்றில் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக உடலுறவு கொண்டிருந்த சமயத்திலேயே மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

அவருடைய குடும்பத்தினர் பணியிட விபத்தாக கோரி நஷ்ட ஈடு தர வேண்டும் என அரசு சுகாதார காப்பீட்டு நிறுவனத்தில் மனு கொடுத்துள்ளனர். இதனை எதிர்த்து அந்த நிறுவனம் மேல்முறையீடு செய்தது. அறிமுகமில்லாத பெண்ணுடன் திருமண பந்தத்தை மீறி உறவு வைத்துக் கொண்டதால் இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது.

அலுவல் காரணமாக அங்கே செல்லவில்லை உடலுறவு செயல்பாடு என்பது உணவு உண்பது போன்ற இயல்பான ஒன்றுதான். இதற்கு காப்பீடு எப்படி வழங்க முடியும் என தெரிவித்தது. அவருடைய மரணம் ஒரு தொழிற்சாலை விபத்து என்று கூறி எப்படி நஷ்ட ஈடு வழங்க முடியும் என பாரிஸ் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

ஆனால் அலுவலக பயணம் மேற்கொண்டிருக்கும் காலகட்டத்தில் எந்த விபத்தில் சிக்கிய அவர் உயிர் இருந்தாலும் அந்த நிறுவனம் தான் பொறுப்பு இருக்க வேண்டும் என்பது பிரெஞ்சு சட்டம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.