தோழியை கிண்டல் செய்ததை தட்டிக்கேட்ட இளைஞரை ஓடவிட்டு குத்தி கொலை செய்த கொடூரம்..!

இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் வசித்து வருபவர் யூசுஃப் கரீம் ஹசான் அல் பேஜானி (வயது 17). இவர் அங்குள்ள பகுதியில் இருக்கும் கல்லூரியில் தொழிற்படிப்பு பயின்று வருகிறார்.

இவர் நேற்று முன்தினதன்று இவரின் வீதியில் இருந்த கும்பல்., இவரின் தோழியினை வம்பிழுத்துக்கொண்டு இருப்பதை அறிந்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த யூசுப்., தோழியை அந்த கும்பலிடம் இருந்து மீட்டுள்ளார்.

பின்னர் தோழியை அவரின் இல்லத்தில் விட்டுவிட்டு திரும்பிய நிலையில்., சுமார் அரைமணிநேரத்திற்கு உள்ளாகவே மீண்டும் வந்த கும்பல்., யூசுபை அரைமணி நேரம் ஓட ஓட துரத்தி கத்தியால் குத்தியுள்ளார்.

இது குறித்த வீடியோ காட்சிகளானது அங்கிருந்த கே.எப்.சி உணவகத்தில் இருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவாகிய நிலையில்., படுகாயமடைந்த யூசுபை மீட்ட அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில்., தீவிர சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும்., இது போன்ற குற்ற சம்பவங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இந்த வருடத்தில் 105 ஆவது படுகொலையாக உள்ளது. கடந்த ஒன்பது நாட்களில் மட்டும்., இது ஏழாவது கொலையாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.