ரயில் தடம்புரண்டு பெரும் விபத்து..!

இந்த உலகம் முழுவதும் விபத்துகள் தொடர்ந்து அதிகளவில் ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்கள் தங்களின் உயிர்களை பரிதாபமாக இழந்து வருகின்றனர். உலகம் முழுவதிலும் எடுக்கப்பட்ட ஆய்வறிக்கையின் படி., நொடிப்பொழுதில் பல்வேறு விபத்துகள் ஏற்பட்டு மக்கள் உயிரிழப்பதாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில்., மத்திய ஆப்ரிக்காவில் உள்ள காங்கோ நாட்டில் பயணிகள் இரயிலானது தடம் புரண்டு பெரும் விபத்திற்கு உள்ளானது. காங்கோ நாட்டில் டாங்கான்கியா மாகாணத்தில் இருக்கும் பகுதியில்., உள்ளூர் நேரத்தின் படி அதிகாலை சுமார் 3 மணியளவில் திடீரென தடம் புரண்டது.

இந்த விபத்தில் தண்டவாளங்கள் முற்றிலும் சேதமடைந்த நிலையில்., அப்பகுதி வழியாக செல்ல வேண்டிய இரயில்கள் அனைத்தும் அடுத்தடுத்து தடையானது. இந்த விபத்து குறித்து மீட்பு குழுவினருக்கு தகவல்கள் வந்துள்ளது.

இதனை அறிந்த அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து., காயமடைந்தவர்களை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்., இந்த மீட்பு பணியின் முதற்கட்டமாக சுமார் 50 பேர் பரிதாபமாக பலியானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தில் ஏற்படுத்தியுள்ளது.