போதை பழக்கத்தால் உடலுக்கு ஏற்படும் கேடுகள் என்னென்ன?

தற்போதுள்ள சூழ்நிலையில் உலகளவில் போதைப்பொருட்களின் பயன்பாடானது தொடர்ந்து அதிகரித்து., பெரும் அளவிற்கு சுகாதார பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. போதைப்பழக்கமானது இன்றுள்ள காலகட்ட நிலையில்., சமூகத்தின் சாபக்கேடாக மாறி வருகிறது என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

ஐக்கிய நாடுகளின் புள்ளி விபரத்தின் படி உலகம் முழுவதிலும் சுமார் 2.30 கோடி மக்கள் பல வகையான போதை பொருட்களை பயன்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும்., நகர பகுதிகளில் விற்பனை செய்யப்படும் சிகிரெட்., மதுபானம் மற்றும் போதைப்பொருளானது ஆண்களை போன்று பெண்களும் உபயோகம் செய்யும் வழக்கம் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனக்கான பிரச்சனையை மறக்க மது மற்றும் போதைப்பொருட்களை நாடுவது., அவர்களின் பிரச்சனைக்கேற்ப தனது துணைக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி., பின்னாளில் அவரையும் மது பாதிப்பிற்கு உள்ளாக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலில் சிறிய அளவிலான புகையிலையை பழகும் நபர்கள் பின்னாளில் மது., கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் மற்றும் மருந்துகள் என அடிமையாகி வருகின்றனர்.

போதை பொருட்களை பொறுத்த வரையில்., ஒவ்வொரு பொருட்களிலும் ஒவ்வொரு வகையான வேதிப்பொருளானது உள்ளது. போதைப்பொருட்களின் வகைகளை பொறுத்து போதையின் உணர்வு மற்றும் சந்தோசம் போன்றவை கிடைப்பதாக., போதை பொருட்கள் உபயோகிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறான போதைக்கு அடிமையாகும் நபர்கள் செய்யும் செயல்கள் குறித்து அறிவோம்.

போதைக்கு அடிமையாகும் நபர் அடுத்த கட்ட போதையை அனுபவிக்க சொந்த இல்லத்தில் திருடுதல்., வீட்டில் உள்ள பொருட்களை அடகு வைத்தால்., பிச்சை எடுத்தால்., அசிங்கமாக நடந்து கொள்வது., பிறரை துன்புறுத்துவது மற்றும் அடிதடி., கொலை., தீவிரவாதம் என்று பல பிரச்சனைகளுக்கும்., சில காம கொடூரன்களால் பாலியல் வன்கொடுமையும் நிகழ்கிறது.

போதை பழக்கத்திற்கு ஆளான நபர்கள் நாளடைவில் மூச்சுத்திணறல்., சளி மற்றும் இருமல் போன்ற பிரச்சனைக்கும்., உணவுக்குழாய் மற்றும் கணையம்., கல்லீரல் பிரச்சனைக்கும்., வயிற்று புண் மற்றும் எடை குறைவு., நோயெதிர்ப்பு சக்தி குறைவது., உடற்சோர்வு போன்ற பிரச்சனைக்கும்., மனநலம் பாதிப்பு போன்ற பிரச்சனைக்கும் உள்ளாகி வருகின்றனர்.

இதுமட்டுமல்லாது முடிவுகளை எடுப்பதில் இருக்கும் சிக்கல்., ஞாபக மறதி., பயம்., வைட்டமின் குறைபாடு., சிறுநீரக பிரச்சனை., இதயம் தொடர்பான பிரச்சனை., போதை நோயாளிகள் என்று பல பல விதமான பிரச்சனைகளுக்கு உள்ளாகி., இவர்கள் செய்யும் பிரச்சனைகளால் அதிகளவு குடும்பத்தினர் பதிக்கவும் செய்கின்றனர். இதனால் பாதிக்கப்படும் குடும்பத்தினர் மீது சமூக மரியாதை குறைதல் மற்றும் சமூக புறக்கணிப்பு., பண பிரச்சனை போன்ற பல பிரச்சனைகளுக்கும் உள்ளாகின்றனர்.