தொப்பையை குறைக்க வழி.!

இன்றைய வாழ்கை முறையில் உணவு பழக்க முறையினால் பல நோய்கள் உருவாகி வருகின்றது. இப்போதெல்லாம் சிறுவயதிலேயே அனைவர்க்கும் தொப்பை உருவாகிறது. அதற்கு முக்கிய காரணம் உணவு பழக்க முறை தான்.

தொப்பையை குறைக்க பல வழிமுறைகள் உள்ளன. தினசரி உடற்பயிற்சியில் ஈடுபட்டால் உடல் எடையும் தொப்பையும் தானாக குறைந்துவிடும். ஆனால் தற்போதைய வாழ்க்கைமுறையில் உடற்பயிற்சி செய்வதற்கு கூட நேரமில்லாமல் பணத்தை நோக்கி ஓடுகின்றனர் மக்கள். இந்த நிலையில் உணவு முறையின் மூலமாகவே தொப்பையை எளிதாக குறைக்கலாம்.

உடலில் உள்ள தேவையற்ற கேட்ட கொழுப்புகளின் மூலம் உடல் எடை அதிகரிக்க நேரிடும். நாட்டு பூண்டு உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, வேகமாக உடல் எடை குறையச் செய்யும்.

இதே போன்று எலுமிச்சையில் இயற்கையாகவே உடலின் வெப்பத்தை அதிகரித்து, மெட்டபாலிசத்தை சீராக்கி, எடையை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். இத்தகைய அற்புத குணங்களை கொண்ட பூண்டு மற்றும் எலுமிச்சை கொண்டு எப்படி தொப்பையை வேகமாக குறைக்கலாம்.

தேவையான பொருட்கள்:
எலுமிச்சை          – 1
பூண்டு                   – 3 பற்கள்
சூடான தண்ணீர் – 1 கப்.

செய்முறை:
சூடான ஒரு டம்ளர் தண்ணீரில், ஒரு எலுமிச்சையின் சாற்றினைப் பிழிந்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின்பு அதில் சில பூண்டு பற்களைத் தட்டி, எலுமிச்சை நீரில் போட்டு, 15 நிமிடம் கழித்து வடிகட்டி தினந்தோறும் குடித்துவந்தால் 3 வாரங்களில் கெட்ட கொழுப்புகள் கரைந்து தொப்பை காணாமல் போய்விடும்.