15 கல்லூரி மாணவியை ஐந்து பேர் சீரழித்து வீடியோ பதிவு செய்து மிரட்டிய சோகம்.!

சேலம் மாவட்டத்தில் உள்ள இராசிபுரம் பகுதியில் தனியார் கல்லூரியானது செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பயின்று வரும் ஆத்தூர் பகுதியை சார்ந்த மாணவி., கல்லூரி பேருந்தில் கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். இந்த சமயத்தில்., இதே பேருந்தில் பயணம் செய்த வாலிபன் ஒருவருடன் நட்பு ரீதியான பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் பேருந்தில் பயணம் செய்த சமயத்தில்., ஒரே இருக்கையில் அமர்ந்து பேசிக்கொண்டு பயணித்துள்ளனர். இந்த விசயத்தை கண்ட இளைஞன் ஒருவன்., காதலனுடன் பெண் இருக்கும் போது வீடியோ காட்சிகளை பதிவு செய்துள்ளான். இந்த வீடியோ காட்சிகளை மாணவியிடம் காண்பித்த காம கொடூரன்கள்., மாணவியை தங்கள் ஆசைக்கு இணங்க கூறி வற்புறுத்தியுள்ளான்கள்.

மாணவி இதற்கு மறுப்பு தெரிவிக்கவே., மாணவியை ஐவரும் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்கள். மேலும்., இந்த காட்சிகளையும் விடியோவாக பதிவு செய்து., மீண்டும் எங்களின் ஆசைக்கு இணங்க வேண்டும் என்றும்., இல்லையேல் விடியோவை இணையத்தில் பரப்பிவிடுவோம் என்று மிரட்டியுள்ளான்கள்.

இதனால் கடும் அதிர்ச்சிக்கு உள்ளான மாணவி., தனது பெற்றோரிடம் நடந்ததை கூறி கதறியழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்கவே., இதனை காவல் துறையினர் ஏற்க மறுத்துள்ளனர்.

இதனால் கடும் மன உளைச்சலுக்கு உள்ளான மாணவி., விஷம் குறித்து தற்கொலைக்கு முயற்சித்து மயக்கமடைந்துள்ளார். இவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கவே., இதற்கு பின்னர் காவல் துறை உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலையை பதிவு செய்துள்ளது.

இந்த நிலையில்., இது தொடர்பான முதற்கட்ட விசாரணையில்., கல்லூரியின் பேருந்து ஓட்டுநர் உட்பட., ஐவர் கொண்ட கும்பல் இந்த கொடூரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும்., இது போன்று 15 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும்., வீடியோ எடுத்து மிரட்டி பணமும் சம்பாதித்தாகவும் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல் வெளியாகும் என்று தெரியவருகிறது.