யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தில் திறக்கப்பட்ட சுற்றுலா பயணிகளுக்கான அறிவித்தல் பலகை!

சுற்றுலாப் பயணிகளுக்கான அறிவுறுத்தல் பலகை யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தில் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய தூதுவராலயமும் சுற்றுலா பொலிஸாரும் இணைந்து நாடுமுழுவதும் சுற்றுலா பயணிகளை பாதுகாக்கும் திட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிகழ்வில் யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர், பிரித்தானிய தூதுவர் , சுற்றுலா பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி மற்றும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, யாழ்ப்பாண ரயில் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளை பாதுகாப்பது இந்த திட்டத்தின் நோக்கமாகும். குறித்த அவதான பலகையில் சுற்றுலா பயணிகளுக்கு ஏற்படும் ஆபத்துகள் தொடர்பாக சுற்றுலா பொலிஸாருக்கு அறிவிக்கக்கூடிய தொலைபேசி இலக்கம் குறிக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலங்களாக சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து பணப்பொதிகள் மற்றும் அவர்களின் ஆவணங்கள் களவாடப்படும் நிலையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.