கல்லூரிக்கு சென்ற பெண்ணிற்கு நேர்ந்த சம்பவம்.!

புதுச்சேரி அருகே தமிழக பகுதியான நல்லவூர் என்ற கிராமத்தில் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த முருகன் என்பவருக்கு திவ்யபாரதி என்ற 19 வயது மகள் இருக்கின்றார். இவர் புதுச்சேரியில் இருக்கும் தனியார் கல்லூரியில் பி எஸ் சி இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

சம்பவ தினத்தில் திவ்யா பாரதி தன்னுடைய கல்லூரிக்கு செல்வதாக பெற்றோரிடம் தெரிவித்து விட்டு சென்றுள்ளார். ஆனால், மாலை வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதன் காரணமாக பெற்றோர்கள் அவரது தோழி வீடுகள், உறவினர் வீடு என பல்வேறு இடங்களில் தேடியும் திவ்யபாரதி கிடைத்தபாடில்லை.

இதனை தொடர்ந்து, மிகவும் பரபரப்பில் இருந்த முருகன் தன்னுடைய மகள் காணாமல் போனது குறித்து கோரிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், “திவ்யபாரதி அதே பகுதியை சேர்ந்த குமார் என்ற வாலிபர் கடத்திச் சென்று இருக்கலாம் என சந்தேகம்” இருப்பதாக காவல்துறையிடம் முருகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏதேனும் காதல் விவகாரமாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.