தாய்ப்பால் கொடுப்பது தாய்க்கு நல்லதா.? கெட்டதா.?

பெண் தனது கணவருடன் சேர்ந்து குழந்தை பிறக்க தாம்பத்தியத்தில் ஈடுபட்ட பின்னர் அவள் தாயாகிறாள். இந்த நிலையில், பெண் சுமார் 10 முதல் 12 மாதங்கள் கருவுற்று குழந்தையை தனது வயிற்றில் சுமந்து பிரசவிக்கிறாள்.

பெண் குழந்தையை பிரசவித்தவுடன்., குழந்தைக்கு தாய்ப்பால் வழங்க வேண்டியது அவசியமான ஒன்றாகும். தாயின் மார்பகத்தில் இருந்து முதன் முதலாக சுரக்கும் சீம்பால் என்று அழைக்கப்படும் தாய்ப்பாலில் அதிகளவு வைட்டமின் ஏ சத்துக்கள் உள்ளது.

சத்துக்கள் நிறைந்த உணவாக தாய்ப்பால் இருந்து, குழந்தைக்கு தேவையான சத்துக்களை வழங்குகிறது. இதன் மூலமாக குழந்தையின் உடல் நலனும் மேம்படுகிறது.

குழந்தைக்கு வழங்கப்படும் தாய்ப்பாலானது தேவையான நேரத்தில் உடனடியாக தாயாரால் வழங்கப்படுகிறது. குழந்தைக்கு தேவையான சுத்தமான பால், இதமான சூட்டில் இயற்கையாக கிடைக்கிறது. இதுமட்டுமல்லாது தாய்க்கும் – சேய்க்கும் உள்ள பிணைப்பு அதிகரிக்கிறது.

இதனால் தாய்க்கும் தாய்மைக்கான மனநிறைவு ஏற்படுகிறது. பொதுவாக தாய்மார்கள் குழந்தைக்கு தாய்ப்பால் வழங்கும் ஆறு மாதங்கள் கருத்தரிப்பதில்லை, இதனால் சிறந்த கருத்தடை முறையாகவும் தாய்ப்பால் குழந்தை பிரசவித்த ஆறு மாதங்கள் வரை செயல்படுகிறது.

ஒரு தாயின் மார்பகத்தில் சாதாரணமாக நாளொன்றுக்கு சுமார் 500 மிலி முதல் 600 மிலி வரை தாய்ப்பால் சுரக்கும். குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவதால் சதைப்பிடிப்பு பிரச்சனையில் இருந்து தாய்மார்கள் பாதுகாக்கப்பட்டு, உடற்கட்டானது பாதுகாக்கப்படுகிறது.