பெற்ற தாயை மகன் கொடூரமாக கொலை செய்த கொடூரன்

தமிழகத்தில் பெற்ற தாயை மகன் கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சேகர் – ஆரோக்யமேரி தம்பதிக்கு இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் சேகர் இறந்து விட, ஆரோக்யமேரி கணவரின் பின்னலாடை உற்பத்தி நிறுவனத்தை எடுத்து நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்று வீட்டின் மேல்தளத்தில் இயங்கி வரும் பின்னலாடை உற்பத்தி நிறுவனத்தில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது வீட்டிலிருந்து ஆரோக்யமேரியின் அலறல் சத்தம் கேட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து அனைவரும் ஓடிச் சென்று பார்த்தபோது, வயிறு மற்றும் நெஞ்சில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் ஆரோக்யமேரி உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அவரது மகன் ஹர்சித் வீட்டின் ஒரு பகுதியில் அமர்ந்து அழுது கொண்டிருந்தார்.

இதனை பார்த்த பணியாளர்கள் உடனடியாக ஆரோக்யமேரியை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த பொலிஸார் ஹர்சித்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது மனநிலை பாதிக்கப்பட்டிருந்த ஹர்சித் வேலைக்கு செல்லாமல் இருப்பதும் பணம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஆத்திரம் முற்றிய நிலையில் தாயை கொன்றதும் தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.