தயிரையும் மாம்பழத்தையும் ஒன்னா சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா?

இன்று பெரும்பாலான மக்கள் டயட் என்பது பிரபலமான ஒன்றாகிவிட்டது. டயட் என்பது வேறு ஒன்றும் இல்லை, உணவுக் கட்டுப்பாடு தான். நோய்கள் மற்றும் ஆரோக்கிய பிரச்சனைகளின் பெருக்கத்தினால், பலர் தங்களைக் காத்துக் கொள்வதற்கான ஒரு வழியாக டயட்டை மேற்கொள்கின்றனர். மேலும் ஒருவர் டயட்டை மேற்கொள்வதன் மூலம், விருப்பமான பல உணவுகளைத் தவிர்க்க வேண்டியிருக்கும்.

டயட் என்று வரும், அதில் பல சுவையான பழங்களும் அடங்கும். பொதுவாக பழங்களில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் டயட்டில் இருப்போர் பலரும் பழங்களைத் தான் அதிகம் சாப்பிடுவார்கள். உங்களுக்கு பழங்களை எப்போதும் ஒரே மாதிரி சாப்பிட அழுத்துப் போயிருத்தால், சற்று வித்தியாசமாக சாப்பிடுங்கள்.

இப்பதிவில் பெரும்பாலானோர் சாப்பிடக்கூடிய ஒருசில பழங்களையும், அந்த ஒவ்வொரு பழத்தின் சுவையையும் பிரமாதமாக்கும் வகைகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ட்ராபெர்ரி மற்றும் டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட்டில் டிப் செய்யப்பட்ட ஸ்ட்ராபெர்ரியை பல இடங்களில் பார்த்திருப்போம். ஆனால் அதை ஏன் வீட்டிலேயே முயற்சி செய்யக்கூடாது. இதற்கு தேவையானது எல்லாம் ஒரு டார்க் சாக்லேட் பாரை உருக்கிக் கொள்ள வேண்டும். பின் சில ஸ்ட்ராபெர்ரியை எடுத்து அந்த சாக்லேட்டில் டிப் செய்து, பின் சாப்பிட வேண்டும்.

டார்க் சாக்லேட்டில் இதயம் மற்றும் மூளையின் ஆரோக்கியத்திற்கு தேவையான பல ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. மறுபுறம் ஸ்ட்ராபெர்ரியில் சருமத்திற்கு தேவையான சத்துக்கள் மட்டுமின்றி, எடையைக் குறைக்கும் மற்றும் தூக்க சுழற்சியை சீராக்கும் பண்புகள் அதிகம் நிறைந்துள்ளது.

மாம்பழம் மற்றும் தயிர்

மாம்பழம் பிடிக்காதவர்களே இவ்வுலகில் இருக்கமாட்டார்கள். சொல்லப்போனால் பழங்களிலேயே மாம்பழத்தின் சுவையை விரும்புபவர்கள் தான் அதிகம் இருப்பர். இத்தகைய சுவையான மாம்பழத்தை சற்று வித்தியாசமாக சாப்பிட விரும்பினால், மாம்பழத்தை துண்டுகளாக்கி யோகர்ட் அல்லது தயிருடன் சேர்த்து சாப்பிட்டால், சர்க்கரை உணவுகளின் மீதுள்ள பிரியும் தணியும்.

ஆப்பிள் மற்றும் வேர்க்கடலை வெண்ணெய்

ஆப்பிளில் நார்ச்சத்து, கனிமச்சத்து மற்றும் வைட்டமின்கள் ஏராளமாக நிறைந்துள்ளது. வேர்க்கடலை வெண்ணெய் வழுவழுவென்று வேர்க்கடலை மணத்துடன் நிறைந்தது. இத்தகைய ஆப்பிளை வேர்க்கடலை வெண்ணெயுடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் அற்புதமான சுவையுடன் இருக்கும். உங்களுக்கு இந்த இரண்டு பொருட்களுமே பிடிக்குமானால், சற்றும் தாமதிக்காமல் உடனே சுவைத்துப் பாருங்கள்.

அத்திப்பழம் மற்றும் ஆட்டுப் பால் சீஸ்

ஆட்டுப் பாலில் இருந்து தயாரிக்கப்பட்ட சீஸில் நல்ல கொழுப்புக்கள் வளமான அளவில் நிறைந்துள்ளது. மறுபுறம் அத்திப்பழத்தில் பாலை விட அதிகளவு கால்சியம் சத்து நிறைந்துள்ளது. இந்த இரண்டு காம்பினேஷனும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, நாவிற்கும் நல்ல காம்பினேஷனும் கூட.