இலங்கை கிரிக்கெட் வீரர்களால் உலகளவில் அசிங்கப்பட்ட பாகிஸ்தான்!!

இலங்கை கிரிக்கெட் அணி வருகிற ௨௭ ஆம் தேதி முதல் அக்டோபர் 9 ஆம் தேதி வரை பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த போட்டிகளில் விளையாட விருப்பம் உள்ள வீரர்கள் அணி தேர்வில் கலந்து கொள்ளலாம் என இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

இந்த நிலையில், பாகிஸ்தானில் நடைபெறவுள்ள போட்டியில் விளையாட விரும்பவில்லை என இலங்கை 20 ஓவர் அணியின் கேப்டன் மலிங்கா, முன்னாள் கேப்டன் மேத்யூஸ், திசரா பெரேரா உள்ளிட்ட 10 வீரர்கள் இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்தனர். இதனால் திட்டமிட்டபடி இலங்கை அணி பாகிஸ்தானுக்கு செல்வது சந்தேகம் தான்.

2009 ஆம் ஆண்டு பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின் போது இலங்கை அணி வீரர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினார்கள். அதன் பின்னர் பாதுகாப்பு கருதி சர்வதேச கிரிக்கெட் அணிகள் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட மறுத்து வருகின்றனர்.

சர்வதேச அளவில் எந்த நாடும் பாகிஸ்தானில் வந்து விளையாட பயப்புடுவது அந்த நாட்டுக்கு இது பெரும் அவமானம் என சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கபடுகிறது.