யாழ்ப்பாணத்தில் திறந்த பேருந்து! வீதியில் குவிந்த பொது மக்கள்

யாழ்.மாவட்டத்திற்கு இரட்டை தட்டு கொண்டுவரப்பட்டதை தொடா்ந்து இன்றைய தினம் திறந்த பேருந்து யாழ்ப்பாணம் கொண்டுவரப்பட்டிருக்கின்றது.

என்டபிறைஸஸ் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழான கண்காட்சியை தொடா்ந்து இரட்டை தட்டு பேருந்து யாழ்ப்பாணம் கொண்டுவரப்பட்டது.

இதனை தொடா்ந்து இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான திறந்த பேருந்து யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இதன்போது பெருமளவான மக்கள் குறித்த பேருந்தை பாா்வையிட்டனர்.