இளம்பெண் எடுத்த விபரீத முடிவு..! காரணம் இதுதான்

தமிழகத்தில் கோவை உள்ள குனியமுத்தூர் என்னும் ஊரின் அருகே கணவன் அடகு வைத்த நகையை திருப்பி தராததால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை குனியமுத்தூர் அருகே உள்ள இடையர்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பையா. இவர் மதுக்கரை சுங்கசாவடியில் பணம் வசூல் செய்யும் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பேச்சியம்மாள் என்கிற சந்தியா (28). இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகன் இருக்கிறார்.

சென்ற சில மாதங்களுக்கு முன்பு தனது மகனுக்கு பள்ளிக்கு பீஸ் கட்டுவதற்காக சுப்பையா தனது மனைவி அணிந்து இருந்த கம்மலை அடகு வைத்து பணம் கட்டினார். கம்மலை அடகு வைத்து நீண்ட நாட்களாக ஆகி விட்டதாலும், உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு செல்ல இருப்பதாலும் கம்மலை திருப்பி தரும்படி சந்தியா தனது கணவரிடம் கேட்டுள்ளார். ஆனால் தற்போது கையில் பணம் இல்லாததால் தற்போது திருப்பி தரமுடியாது என சுப்பையா கூறி விட்டு வேலைக்கு சென்றார்.

இதனால் மனவேதனை அடைந்த சந்தியா வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட சந்தியாவின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.