இரவு வேளை இராணுவத்தினர் மீது தாக்குதல் மேற்கொண்ட இளைஞர் குழு ஒன்று!

புதுக்குடியிருப்பு- மந்துவில் பகுதியில் இலங்கை படையினர் மீது இளைஞர் குழு ஒன்று நேற்று இரவு தாக்குதல் நடாத்திவிட்டு தப்பி சென்ற நிலையில் இன்றைய தினம் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை இராணுவ முகாம் வீதியால் சென்ற இளைஞர் குழு அங்கிருந்த இலங்கை இராணுவ சிப்பாய்களை மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளது.

இதனையடுத்து தாக்குதலுக்கு இலக்கான இலங்கை படையினா் புதுக்குடியிருப்பு இலங்கை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர். இந்த முறைப்பாட்டுக்க அமைவாக இன்றைய தினம் காலை விசேட தேடுதல் நடவடிக்கையில் இறங்கிய இலங்கை பொலிஸார் புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை சந்தேகத்தின் பெயரில் கைது செய்துள்ளனர்.