மட்டக்களப்பில் மக்களின் தேவை உணர்ந்து சேவையாற்றுமாறு மக்கள் கோரியுள்ளனர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றும் SLAS தரத்தில் உள்ள அனைத்து தமிழ், முஸ்லிம், சிங்கள அதிகாரிகள் தங்கள் கடமைகளினை செய்ய தவறுவதாக விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிகாரிகள் பொது மக்களின் தேவை உணர்ந்து சேவையாற்றுமாறு அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.

அந்தவகையில் அவர்கள் பொதுமக்களுக்காக அரசினால் வழங்கப்படும் பணத்தில் ஊழல் செய்யாமல் , அதனை சரியான முறையில் மக்களிற்கு வங்குமாறும் அவர்கள் கூறியுள்ளனர்.

அதோடு தங்களுடைய நிருவாகத்தின் கீழ் சேவையாற்றும் ஊழியர்கள் சிறப்பாகவும் இலஞ்சம் வாங்காது சேவையாற்றுவார்கள் என்றும் அவர்கள் ஒருதடவை கூட சேவை காலத்தில் இலஞ்சம் வாங்கினால் அல்லது ஊழல் செய்தால் அல்லது கடமையை குறித்த காலத்தில் செய்ய தவறும் போது குறித்த ஊழியரை வேலையில் இருந்து நிறுத்தவேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் குறிப்பிட்டுள்ளனர்.