இங்கிலாந்தில் நடந்த ஆன்லைன் லாட்டரியில் விழுந்த 990 கோடி ரூபாய்!!

இங்கிலாந்தில் நடந்த ஆன்லைன் லாட்டரியில் கிடைத்த 990 கோடி ரூபாய் பரிசை பெற்று செல்ல இதுவரை யாரும் முன்வரவில்லை.

ஐரோப்பாவில் உள்ள 9 நாடுகள் இணைந்து பான் ஐரோப்பியன் முறையில்ஆன்லைன் லாட்டரியை நடத்தி வருகின்றன. இதில் பங்கேற்க விருப்பம் நபர்கள் 5 எண்களைத் தேர்வு செய்யவேண்டும். எந்த எண் பரிசுக்கு உரியதாக உள்ளதோ அந்த நபருக்கு பல கோடி ரூபாய் பரிசாகக் கிடைக்கும்.

அந்தவகையில், இந்த லாட்டரி விற்பனையில் கடந்த வார குலுக்கலில் முதல் பரிசாக 124 மில்லியன் யூரோ கிடைத்துள்ளது. ஆனால் அந்த பரிசுத் தொகையைப் பெற இதுவரை யாரும் முன்வரவில்லை, உரியவர்கள் வந்து பரிசைப் பெற்றுச் செல்லுமாறு பான் ஐரோப்பா அமைப்பு தெரிவித்துள்ளது.